இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடாத காரணம் என்ன? விபரம் இதோ.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வ

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரங்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு இது சுலபமான போட்டியாக போகவே 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் இருப்பார் என்றும் பாலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட இஷான் கிஷான் அரை சதம் விளாசினார். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பாரபடாஸ் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறாததால் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் ரோகித்துடன் சேர்த்து விராட் கோலியும் இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் அக்சர் படேலுக்கு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் விளையாட்டை பார்க்க வந்த ரசிகர்களுக்கு அவர்கள் விளையாடததால் ஏமாற்றாமே மிஞ்சியது.

விராட் மற்றும் ரோஹித் விளையாடாத காரணம் :

இந்த இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஏன் விளையாடாத காரணம் குறித்து பேசிய அவர் கூறுகையில் “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வை வழங்கும் விதமாகவே இந்த போட்டியில் அவர்கள் இருவரும் விளையாட வில்லை. மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரும் புத்துணர்ச்சியோடு மீண்டும் வருவார் என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை