எங்களுடைய மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது – வரலாற்று வெற்றிக்கு பிறகு ரோமன் பவல் உருக்கம்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல

By ·

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாற்று துவக்கத்தை பெற்றது. ஆனாலும் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக செயல்பாட்டு இந்தியாவிற்கு நல்ல ஸ்கோரை கொண்டுவர முயற்சி செய்தார்கள். இருந்த போதிலும் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடி துவக்கிய கெய்ல் மேயர்ஸ் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல சரமாரியாக அடித்து நொறுக்கினார். ப்ரெண்டன் கிங் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்ததால் 18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் போட்டியின் பிறகு பேசுகையில் “தற்போது உள்ள உணர்வுகளை வார்த்தைகளை கொண்டு விவரிப்பது கடினம். எங்களுடைய மண்ணில் இந்தியாவை வீழ்த்தியது மகிழ்ச்சி. நேற்றைய ஆட்டத்தில் எங்களுக்கு மோசமான தோல்வி வந்த பிறகு நேற்று மாலை நாங்கள் அனைவரும் அமர்ந்து என்ன செய்யலாம் என்பது குறித்து பேசினான். கரீபியனில் உள்ள எங்களுடைய மக்கள் ஏதாவது ஒரு நல்ல விஷயத்திற்காக ஏங்கினார்கள்.

எங்களுடைய அணியின் பயிற்சியாளர் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் அதிகமா கடன் பட்டுள்ளோம். 4வது போட்டியில் நாங்கள் பெற்ற தோல்விக்குப் பிறகு நாம் எளிதில் பீதியடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் 4வது போட்டிக்கு பிறகு போட்ட திட்டங்கள் நன்றாக இருந்தன. ஒருவர் சிறப்பாக செயல்பட்டால், அணிக்கு பலன் கிடைக்கும். நிக்கோலஸ் பூரன் எங்களுக்கு ஒரு பெரிய வீரர். ஐந்து ஆட்டங்களில் குறைந்தது மூன்றிலாவது சிறப்பாக விளையாடி கொடுக்குமாறு அவரைக் கேட்டோம். அதனை அவர் செய்தார்.

இந்தியா போன்ற கிரிக்கெட் போட்டியில் சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையை அவர்கள் கட்டுப்படுத்திய எங்களுக்கு பந்துவீச்சு பிரிவுக்கு பெருமை சேரும். மேலும் இந்த முறை போட்டியை காண அதிக ரசிகர்கள் வந்து ​​எங்களுக்கு ஆதரவளித்தனர். உடல் ரீதியாக மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பதைக் காண முடிந்தது. அது எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என்றார் கேப்டன் ரோமன் பவல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை