ராஜஸ்தானை 59 ரன்களில் ஆல் அவுட் செய்த ஆர்சிபி – பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
ஐபிஎல் 2023 தொடரின் 60வது ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 18(19) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் வருக்கு பிறகு களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் வழக்கம் போல அதிரடியாக விளையா
ஐபிஎல் 2023 தொடரின் 60வது ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்நிலையில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 18(19) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் வருக்கு பிறகு களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் வழக்கம் போல அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த அசத்திய கேப்டன் டு பிளேஸிஸ் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு பிறகு வந்த மகிபால் லோம்ரர் 1 (2) ரன்னிலும் தினேஷ் கார்த்திக் அதே ஓவரில் டக் அவுட்டாகினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மாவுடன் அவர் பகிர்ந்து கொண்டார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 54 (33) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.
அதனால் கடைசி நேரத்தில் ரன்கள் வேண்டும் என்றிருந்த நிலையில் பெங்களூருவுக்கு தம்மாலும் முடியும் என்ற வகையில் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட இளம் வீரர் அனுஜ் ராவத் 29* (11) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். அதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் பேட்டிங் :
இந்நிலையில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கமே பரிதாபமாக இருந்தது. அதிரடி மன்னன் ஜெய்சவால் 0(2) இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க அதற்கு அடுத்த ஓவரிலேயே பட்டலர் 0(2) ஆட்டமிழந்தார். மேலும் அதற்கு அடுத்த பந்திலேயே கேட்டான் சஞ்சு சாம்சன் 4(5) ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் நம்பிக்கை வைத்திருந்த ரூட் LBWவில் ஆட்டமிழந்தார்.
இப்படி ஒரு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் படிக்கையில் 4(4) ஆட்டமிழந்த நிலையில் பார்ட்னர்ஷிப் கிடைக்காத போது ஷிம்ரன் ஹெட்மயர் மட்டுமே தனி ஆளாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் துருவ் ராஜ் 1(7) ஆட்டமிலந்த நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த பந்தே அஸ்வின் ரன் அவுட் ஆனால். அதற்கு 9.5 ஓவரின் பொது ஷிம்ரன் ஹெட்மயரூம் ஆட்டமிழந்த நிலையில் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ஆர்சிபியின் பேட்டிங்கை தாக்கு புடிக்க முடியாமல் 10.3 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது ராஜஸ்தான்.