வீடியோ : எனக்கு புல்லரித்து விட்டது – தோனியை முதல் முதலில் சந்தித்த நிகழ்வை பகிர்ந்து கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. இதுவரையில் தோனி இந்தியாவிற்கு மூன்று வகையான உ
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. இதுவரையில் தோனி இந்தியாவிற்கு மூன்று வகையான உலக கோப்பைகளையும், சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி 5 ஐபிஎல் கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டியில் தோனி :
பல வெளிநாட்டு வெளிநாட்டு வீரர்களே தோனியின் தலைமையின் கீழ் ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் பெருமை பெற்றவர் தோனி. இதனிடையே தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டாலும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் போட்டி இடைவேளையின் போது மற்ற அணி வீரர்களுடன் உரையாடுவது, அவர்ளுக்கு அறிவுரை கொடுப்பது என இருந்து வருகிறார் தோனி
இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக சென்றிருக்கும் இந்திய அணியின் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவில் தோனியை சந்தித்த நிகழ்வு பற்றியும், அவருடன் இணைத்து விளையாடியது பற்றியும் சில சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஜெய்ஸ்வால் கூறியது :
முதலில் பேசிய ஜெய்ஸ்வால் “நான் முதன் முதலில் தோனி சாரை சந்ததிக்கும் போது எனக்கு வார்த்தைகளே வரவில்லை. நான் அவருடன் நமஸ்தே சார் என்று கூறினேன். ஏனென்றல் நீங்கள் சிறுவயதில் இருந்து பார்த்து ஒருவரை பார்த்து வளர்ந்து பின்னர் அவரை சந்திக்கும் போது தானாக அவருக்கு நீங்கள் மரியாதை கொடுப்பீர்கள். உங்களுக்கு புல்லரித்துவிடும். அவரைப் பார்ப்பது ஒரு பாக்கியம். நான் அவருடன் அதிக காலம் செலவு செய்து பல்வற்றை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ருதுராஜ் கூறியது :
இதனை தொடர்ந்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “தோனியுடன் என்னால் பழக முடிந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்த்தவன் என்று நினைக்கிறேன். போட்டி முடிந்த பின்னர் பல வீரர்கள் தோனியிடம் ஆலோசனை கேட்கவும், அவருடன் பேசவும் வருவதை நான் பல முறை பாத்திருக்கிறேன். ஆனால் நான் அவருடன் ஒவ்வொரு நாளிலும் அல்லது 3 மாதங்களும் அல்லது வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பே பெற்ற நான் அதிர்ஷ்டம் செய்த்தவன் என்றும் நினைக்கிறேன்.
Memories ✨
— BCCI (@BCCI) July 11, 2023
S
D
Yashasvi Jaiswal & Ruturaj Gaikwad share their precious memories with @msdhoni during their conversation ahead of the first Test👌🏻👌🏻
Full Podcast 🎙️ Episode coming 🔜 on https://t.co/Z3MPyeL1t7 ⏳#TeamIndia | #WIvIND | @ybj_19 | @Ruutu1331 pic.twitter.com/cQ7RUGrgs4
தோனி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் வளர்ச்சியில் முக்கியமான ஒரு காரணியாக இருந்தார். என்னுடைய ஏற்றத்திலும் இறக்கத்திலும் எங்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரான எனக்கு நம்பிக்கை கொடுத்தார் தோனி என்று அந்த பேட்டியில் கூறினர் ருதுராஜ் கெய்க்வாட். இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான், ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு கண்டிப்பாக இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.