ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இப்படி ஒரு நிலைமையா? – வருத்தத்தில் ரசிகர்கள்.
இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா.இந்நிலையில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு
இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா.இந்நிலையில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஏனென்றால் பிட்ச் ரிப்போர்ட்டில் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறியது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌளரான அஸ்வின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவருடன் கைகோர்த்த ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஹம்மது சிராஜ் ஒரு விக்கெட்டும் ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்து வெஸ்டி இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கும் ஆல் அவுட் செய்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய முதல் நால் முடிவில் 80 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டவது நாளானது தொடங்கி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் விளாசினார்கள். மேலும் 229 பார்ட்னர் ஷிப் வந்த நிலையில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பந்த சுப்மன் கில் பரிதாபமாக 6 ரங்களுக்கு ஆட்டமிழக்க தற்போது விராட் கோலியும் ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ருதுராஜ் பெயரும் இடம் பெற்றது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக ஜெய்ஸ்வாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனும் இடம்பெற்றதினால் இந்த தொடரில் ப்ளெயின் லெவனில் இடம் பெற முடியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடினார், இருந்து போட்டியிலும் கூட அணிக்கு மிகவும் தேவையான ரன்களை எடுத்து வெற்றியடைய வைத்தார்.
ஆனால் அப்படி ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டும் தற்போது இந்தியா வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வரும் பிளெயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் போனது ரசிகர்களுக்கு வருத்தமே. மேலும் இந்த போட்டியின் போது ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும் போது தண்ணீர் கொண்டுவரும் வாட்டர் பாயாக ருதுராஜ் வந்தார். தண்ணீர் கொண்டுவருவதில் எந்த தவரும் இல்லை என்றாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று CSK ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.