இவர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது – ருதுராஜ் கெய்க்குவாட் நெகிழ்ச்சி பேட்டி.

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடர்ந்து நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில் இந்திய கிரிக்கெட் சூழ்நிலையானது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னரே 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடிப்பெற்றது வருகிறது. இதில்

By ·

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடர்ந்து நேற்று பரபரப்பாக தொடங்கிய நிலையில் இந்திய கிரிக்கெட் சூழ்நிலையானது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னரே 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடிப்பெற்றது வருகிறது. இதில் இந்திய அணி நேரடியாக காலிறுதி போட்டிக்கு சென்றது இந்நிலையில் ஆண்கள் கிரிக்கெட்டி பிரிவில் இந்திய அணியை ருதுராஜ் கெய்க்குவாட் வழிநடத்தினார்.

மேலும் இந்த அணியில் திலக் வர்மா, ரிங்கு சிங், போன்ற அதிரடி வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் முதலாக நேபாளம் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியானது இன்று 6ஆம் தேதி நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெட்ரா நிலையில் இன்று இறுதி போட்டியில் ஆபிகானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது.

இதனை போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 18.2 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டத்தை தடுத்தது, இதனால் இந்த தொடரில் நல்ல புள்ளிகளுடன் இருந்த இந்திய அணிக்கு தங்க பதக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ருதுராஜ் கெய்க்குவாட் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் என்ற முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.

இதற்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் “எதிர்பாராத ஒன்றின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த விளையாட்டில் ஈடுபட்ட அனைத்து 15 வீரர்களுக்கும், 100 சதவீதத்திற்கும் அதிகமாக உதவிய அனைத்து துணை ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எல்லோரும் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ருதுராஜ் கெய்க்குவாட்

மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் போட்டியில் சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் கிரிக்கெட் விளையாடும்போது தண்டுய விளையாட்டை ரசித்து விளையாடுவதாக கூறினார். இது குறித்து அவர் பேசுகையில் “இது ஒரு அற்புதமான உணர்வு என்று நான் நினைக்கிறேன். நான் வெளியே செல்லும் போதெல்லாம் என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பேன். மேலும் அச்சமின்றி வெளியே சென்று விளையாட்டை ரசிக்கிறேன் என்றார் ஜெய்ஸ்வால்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “நாங்கள் ஒரு அற்புதமான முகாமை நடத்தினோம், BCCI க்கு நன்றி மற்றும் எங்கள் மீது கடினமாக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி மேலும் இது ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை