கேப்டன்சி பற்றி அப்போவே சொல்லிட்டாரு…மகி பாய் முன்னாடி என்னோட அரைசதம்….- கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இத
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதற்க்கு முன்பு சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டயாத்தில் இருந்தது வந்தது. அந்த அழுத்தம் இந்த போட்டியில் இருந்து வெளியேறியது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார். சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே அவர்களது பணியை செய்து இருந்தார்கள்.கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டில் பந்து படவே இல்லை. இறுதியில் கொல்கத்தா அணியால் 20வது ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமீ அடித்து இருந்தது. கொல்கத்தா அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும் நரைன் 27 ரன்களும் ரகுவான்ஷி 24 ரன்களையும் அடித்து இருந்தனர். மற்ற வீரர்களால் பெரிதாக ரன்களை குவிக்க முடியவில்லை. இதில் சென்னை அணி சார்பில் ஜடேஜா மற்றும் தேஷ்பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் முஸ்தபீசூர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.
அதன் பின் 138ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர். அதன் விளைவாக சென்னை அணி 17.4 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களையும் துபே 28 ரன்களையும் மிட்சல் மார்ஷ் 25 ரன்களையும் எடுத்து இருந்தனர். கொல்கத்தா அணியின் சார்பில் நரைன் மற்றும் அரோரா தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளில் இருந்து இந்த வெற்றியின் மூலம் மீண்டு வந்துள்ளது. இந்த வெற்றி கொல்கத்தா அணியின் அடுத்தடுத்து வெற்றிகளுக்கு தடையாக இந்த தோல்வி கொல்கத்தா அணிக்கு அமைந்தது. இந்த போட்டியில் கேப்டன் ருதுராஜ் தனது கேப்டன்சியில் முதல் அரை சதத்தை அடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் சென்னை அணிக்காக கேப்டனாக ஐந்து வருடங்களுக்கு பிறகு இன்று தான் ஒரு அரை சதத்தை பதிவு செய்து இருந்தார்.
வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், எனது முதல் ஐபிஎல் அரைசதம், போட்டியை முடிக்க மஹி பாய் என்னுடன் இருந்தார். ரஹானே காயமடைந்ததால், பேட்டிங் செய்யும் பொறுப்பு என் மீது இருந்தது, இளைஞர்களை கடினமான சூழ்நிலையில் தள்ள விரும்பவில்லை. 150-160 ரன்கள் எடுக்க கூடிய விக்கெட்இந்த அணியில் உள்ள வீரர்களை பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை. எல்லோரும் ஒரு பெரிய இடத்தில் இருக்கிறார்கள்.
மஹி பாயும் ஃப்ளெமிங்கும் அந்த அழைப்புகளை எடுக்க இன்னும் சுற்றி இருக்கிறார்கள். என்னுடையது மெதுவான ஆரம்பம் என்று நான் சொல்லமாட்டேன், டி20களில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை அடித்து நொறுக்குவது சில சமயங்களில் இருக்கும், சில சமயங்களில் நீங்கள் விளையாடுவதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை, நிபுணர்கள் பேசுவதற்கு ஏதாவது இருக்கலாம், என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுவார்கள் 2022ல், மஹி பாய் என்னிடம், அடுத்த ஆண்டு அல்ல, அதற்குப் பிறகுதான் தலைமை வகிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று என்னிடம் கூறினார். கடந்த ஆண்டு ஃப்ளெமிங்கும் நானும் ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகு கேப்டன் பதவியைப் பற்றி பேசினோம். அந்த கட்டத்தில் நான் என்ன செய்வேன், எனது திட்டங்கள் மற்றும் எண்ணங்கள் பற்றி பேசினோம் என அவர் கூறினார்.