இந்திய அணிக்கு கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்..மேலும் பல ஐபிஎல் வீரர்களுக்கு வாய்ப்பு – எந்த போட்டியில் தெரியுமா?

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம்

By ·

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய தன்னுடைய டி20 அணியை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதே வேலையில் விளையாட்டு சாதனைகளில் உச்சமான ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மும்பரம் காட்டி வருகிறது. அதன் தொடக்கமாகத்தான் ஆசிய கோப்பைகளின் முதல் படியாக கிரிக்கெட் போட்டிகளானது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தான் இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதினால் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணியை அனுப்பலாமா என்ற ஆலோசனையில் பிசிசிஐ இருந்த நிலையில் தற்போது அங்கு செல்லும் இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த அணியில் இந்திய கிரிக்கெட்டில் நம்பமுடியாத வளர்ந்து வரும் திறமைகளின் கலவையாக முக்கிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் இந்த அணியை ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னனை அணிக்காக திறமையாக விளையாடிய தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடத்த ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் மற்றும் ஜிட்சே சர்மா ஆகிய இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. இது அவர்களின் திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறலாம். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், 14 போட்டிகளில் இருந்து 474 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் வலிமையைக் காட்டினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஆசிய போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இவர்களுடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஜிதேஷ் ஷர்மாவும் ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அதோடு இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இரண்டாவது விக்கெட் கீப்பராக உள்ளனர்.

இந்தியா அணி :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை