எல்லாருக்கும் நன்றி.. இந்த அணியை வைத்து இவ்வளவு தூரம் வந்ததில் மகிழ்ச்சி.. இருந்தாலும் இது ஏமாற்றமே – ருதுராஜ் பேட்டி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் பல பரீட்சை செய்தது. டாஸ் வென்ற
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் பல பரீட்சை செய்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது பெங்களூரு அணிக்கு தான் சாதகமாக அமைந்தது.
பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடமைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடி சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளசிஸ் 54 ரன்களும் ரஜத் படிதார் 41 ரன்களையும் கிரீன் 38 ரன்களையுய்ம் அடித்து இருந்தனர். சென்னை அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் முதலில் கேப்டன் ருதுராஜ் ரன்களை எடுக்காமல் 0 ரன்னில் வெளியேறினார். சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா 61 ரன்களும் ஜடேஜா 42 ரன்களும் ரகானே 33 ரன்களும் தோனி 25 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது : நேர்மையாக இருக்க இது ஒரு நல்ல விக்கெட் என்று நான் நினைக்கிறேன். மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம்.14 ஆட்டங்களில் ஏழு வெற்றிகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி இரண்டு பந்துகளில் லைனைத் தாண்ட முடியவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட காயங்கள், இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்களை தவறவிட்டது, கான்வே ஆர்டரில் முதலிடத்தில் இல்லாததால், மூன்று முக்கிய வீரர்களை தவறவிட்டது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.
CSK ஊழியர்கள் மற்றும் சீசன் முழுவதும் எங்களுக்காக சிறந்த நிகழ்ச்சியை வழங்கிய அனைவருக்கும் நன்றி. முதல் ஆட்டத்தில் எங்களுக்கு பல சவால்கள் இருந்தன. முஸ்தாபிஸூர் காயம், பின்னர் பத்திரனவுக்கும் காயம், அவர் திரும்பி வந்தார், பின்னர் மீண்டும் பத்திரனா அணியை விட்டு சென்றார். உங்களுக்கு காயங்கள் இருக்கும்போது அணியின் சமநிலையை கொண்டுவருவது கடினம்.
கடந்த ஆண்டு எங்களின் கடைசி நாக் அவுட் ஆட்டத்தில் நாங்கள் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தோம். விஷயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை இந்த சீசனில். என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட மைல்கற்கள் உண்மையில் முக்கியமில்லை, நீங்கள் 100 ரன்கள் எடுத்தாலும் அல்லது 500-600 ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை. எல்லாவற்றுக்கும் பிறகு இறுதி இலக்கு வெற்றியே முக்கியம். நீங்கள் அங்கு வரவில்லை என்றால் அது ஏமாற்றம்தான் என்றார் ருதுராஜ் ஜெய்குவாட்.