நாங்க பண்ண தப்பே இதுதான்.. அடுத்த போட்டி ரொம்ப கஷ்டம் – ருதுராஜ் கெய்க்குவாட் பேட்டி.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை முடிவு செய்தார். இந்நிலையில் இது அவர்களுக்கு பாதகாமாக சென்றது.

சொல்லப்போனால் பந்துவீச்சில் சென்னை அணியிடம் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இது கொஞ்சம் கடினமான போட்டியாக சென்றது. முதலில் பந்துவீசிய சென்னை அணி மோசமாக பந்துவீசியது. சொல்லப்போனால் இந்த தொடரில் சென்னையின் மோசமான பந்துவீச்சில் இருந்தும் ஒன்று. இதனால் குஜராத்தை அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்து சதம் அடித்தனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்மே இழந்து 231 ரன்களை அடித்தது. இந்த இலக்கை எதிர்த்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக ரச்சின் ரவீந்திரா, ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணி ரன்களை குவிக்க தடுமாறியது. இருந்த போதிலும் அற்புதமாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி பொறுமையாக விளையாடி இருவரும் அரை சதம் அடித்தனர்.

இவர்கள் பின்னர் ஆட்டமிழந்த நிலையில் இதற்கு பிறகு வந்த ஜடேஜா மற்றும் சிவம் துவே சொலிக்காத நிலையில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்மே அடித்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான் காரணம் அவர்களின் பந்துவீச்சு சரியில்லை. மேலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது இந்த போட்டியில் சென்னையின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் பேசுகையில் : எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது. நாங்கள் அதில் சரியாக செயல்படவில்லை. எங்களது அணி எதிரணிக்கு 10-15 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம் என்று நான் நினைக்கிறேன், செயல்திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர்.

பேட்டர்கள் நன்றாக விளையாடி செட்டில் ஆகி இருக்கும் போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் . இது மிகவும் விரைவானது, அடித்ததாக எங்களுக்கு ராஜஸ்தான் அணியுடன் சென்னையில் போட்டி இருப்பதினால் அங்கு செல்ல வேண்டும். அந்த போட்டி கடினமானதாக சூழ்நிலையில் விளையாட வேண்டியதாக இருக்கும் என்றார் ருதுராஜ் கைகுவாட்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை