“இது முடிவு உங்களுக்கு தான் புதுசு ஆனா எனக்கு இல்லை… மஹி பாய், ஜட்டு பாய் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” – ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு.

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வெ

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் சென்னை அணியின் கேப்டனாக தோனி தாமாக விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பதவியை அவர் வழங்கி விட்டார்.

ஐபிஎல் பொறுத்தவரை இது நடைபெற்ற சீசன்களில் இரண்டு முறை தவிர்த்து பெரும்பாலான சீசன்களில் சென்னை அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். அதில் ஐந்து முறை கோப்பையையும் 5 முறை இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் CLT கோப்பையையையும் இரண்டு முறை பெற்று கேப்டன்சியில் தனது திறமையை நிருப்பித்துள்ளர். அவர் கேப்டன்சியில் எப்போதும் கூலாக இருப்பதால் அனைவரும் அவரை கேப்டன் கூல் என்றும் அழைப்பார்கள்.

இந்த வருடம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தி என்னவென்றால் இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் ஒரு அணிக்கு கேப்டன்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த மூன்று வீரர்களும் இந்த தொடரில் வெறும் வீரர்களாக மட்டுமே விளையாட உள்ளனர். தோனி தனது கேப்டன்சி பதவியை சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் அமர்த்தியுள்ளார்.

தோனி கடைசி ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்று வெற்றி கேப்டனாக தந்து கேப்டன்சி பதவியை துறந்துள்ளார். அவர் கடந்த வருடமே காலில் காயத்துடன் தான் பேட்டிங் செய்து வந்தார். தோனி தற்போது கேப்டன்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு எமற்றதைய அளித்துள்ளது. தோனி தன்னை நம்பி கேப்டன்சி பொறுப்பை அளித்தது குறித்தும் தோனியை குறித்தும் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், தோனி பாய் ஒரு தலைமைப் பாத்திரத்தில் நம்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த உரிமையாளரின் இயக்கம் எனக்குப் பிடிக்கும், வெற்றிக்கான மந்திரம் என்ன என்பதை நான் அறிந்தேன். அதில் ஒரு துளி கூட மாற்ற விரும்பவில்லை – என்னைப் பொறுத்தவரை, மஹி பாய், ஜட்டு பாய் & அஜ்ஜு பாய் ஆகியோர் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயராக இரு என்று மஹி பாய் கடந்த ஆண்டே என்னிடம் தெரிவித்தார் என்றும் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை