என் வாழ்க்கையில் இந்த மாதிரியான ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 39 வது போட்டியை ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது இரண்டு அணிகளுமே மிகவும

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 39 வது போட்டியை ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான பொடியாக இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு இது மிக முக்கியமான போட்டி.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அவர்களுக்கு சிறப்பாக வகையில் பயன் அளித்தது. ஆப்கானிஸ்தான அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து காரணத்துக்கு 291 ரன்களை குவித்து இருந்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சிறப்பாக விளையாடி 143 பந்துகளில் 129 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார்.

இதனையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னரும் 18 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. பின்னர் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று விளையாட தடுமாறிய நிலையில் அதிரடி வீரராக மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

அவர் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தினால் தனி ஒரு மனிதராக இந்த போட்டியை வென்று முடித்துள்ளார். அவருக்கு போட்டியின் இடையில் காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் தனி ஒரு மனிதராக நின்று 128 பந்துகளில் 201 ரன்களை குவித்து இருந்தார். அதில் 10 சிக்ஸர்கள் 21 பவுண்டரிகள் அடங்கும். எப்படி எனது கடைசிவரை ஆப்கானிஸ்தான் கடைசியில் கதையை மாறியது போல தனி ஒரு மனிதராக மேக்ஸ்வெல் போட்டியை மாற்றி அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த அற்புதமான ஆட்டத்திற்கு பலரும் பாராட்டுகளை குறி வரும் நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்தை கூறியுள்ளார். அவர் போட்டிருந்த ட்விட் பதிவில் “ஆப்கானிஸ்தான் அணியை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர ஒரு அற்புதமான நாக்கை இப்ராஹிம் விளையாடி சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி 2வது பாதியில் நன்றாகத் தொடங்கி 70 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடினர், ஆனால் கடைசி 25 ஓவர்கள் வரை மேக்ஸ்வெல் விளையாடிய விதம் அவர்களின் அதிர்ஷ்டத்தை மாற்ற போதுமானதாக இருந்தது.

மேக்ஸ்வெல் ஆடிய அந்த அடம் அதிகபட்ச அழுத்தத்திலிருந்து அதிகபட்ச செயல்திறன் ஆகும். மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டு ஒரு சிறந்த நாக் இதுவாகும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை