எப்படிபா இப்படி செஞ்சீங்க.. ஆச்சரியமா இருக்கு – வியந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்.
க கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இ
க கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் இரண்டு வெற்றியில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.
நேற்று தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியது. மழையின் காரணமாக போட்டியானது 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்ச எட்வர்ட்ஸ் 78 ரன்களும் வான் டெர் மெர்வே 29 ரன்களும் ஆரியன் தட் 23 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து 43 ஓவர்களில் 246 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் இருந்தாலும் போகப்போக அந்த தொடக்கத்தை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்ச ரன்களாக டேவிட் மில்லர் 43 ரன்களும் க்ளாசண் 28 ரன்களும் கோட்சி 22 ரன்கள் மட்டுமே அடித்தனர். 42.5 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து உங்களை 207 மட்டுமே அடிக்க முடிந்தது
நெதர்லாந்து அணியில் பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை கட்டி போட்டனர்.லோகன் வான் பீக் 3 விக்கெட்டும் ரோலோஃப் வான் டெர் மெர்வே,பால் வான் மீகெரென், தலா இரண்டு விக்கெட்களையும் ஆங்கர்மெண் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலகக்கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது
இந்த அற்புதமான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரும் கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நெதர்லாந்து அணியை பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் ” இந்த உலகக் கோப்பை சுவாரஸ்யமான முடிவுகளைத் தருகிறது. ஒரு கட்டத்தில் 140/7 என்ற நிலையில் இருந்த நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒரு சண்டை மூலம் முன்னணியில் இருந்து முன்னிலை வகித்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
களத்தில் அவர்களைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னவென்றால், அவர்கள் எப்படி எளிதாக ரன்களை எடுக்க ஓட விடாமல் தென்னாபிரிக்க அணியின் பேட்டர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதுதான். அவர்களுக்கு ஒரு வெற்றி மேலும் இது அவர்களது நினைவில் நீங்காது இருக்கும் என்று சச்சின் டென்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.