“உன்னுடைய தந்தையாக” மகன் குறித்து சச்சின் டெண்டுல்கர் போட்டுள்ள உருக்கமான பதிவு.
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்த சாதனையை இன்னும் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர் இந்தியா அணிக்காக மட்டுமின்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி இருக்கிறார். இந்நிலைய
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்த சாதனையை இன்னும் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர் இந்தியா அணிக்காக மட்டுமின்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு சாரா டென்டுக்கர் என்ற மகளும், அர்ஜுன் டெண்டுல்கர் என்ற மகனும் இருக்கின்றனர்.
இதனிடையே தான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதன் முறையாக தன்னுடைய ஐபிஎல் பொடியை ஆடியிருக்கிறார்.அர்ஜுன் நீண்ட காலமாக மும்பை அணியுடன் இருந்து வருகிறார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அர்ஜுன் தன்னுடைய வாய்ப்புக்காக பெஞ்சில் வகாத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இறுதியாக ஐபிஎல் 16வது சீசனின் மும்பை ஆடிவரும் நான்காவது போட்டியில் அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
போட்டிக்கு முன்னர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரோஹித் சர்மா தொப்பியை அணிவித்தார். மேலும் இந்த நிகழ்வின் போது அர்ஜுன் டெண்டுல்கரின் சகோதரி சாராவும் வந்திருந்தார். அர்ஜுன் தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கும் போது சாரா தன்னுடைய சகோதரருக்காக கைதட்டி ஆரவாரம் செய்தார்.
அர்ஜுன் நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் பயணத்தில் மற்றொரு முக்கியமான படியை எடுத்து வைத்துளீர்கள். உங்கள் தந்தையாக உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள உள்ள ஒருவராகவும் எனக்கு தெரியும். நீங்கள் விளையாட்டிற்குரிய மரியாதையை தொடர்ந்து வழங்குவீர்கள். அப்படி வழங்கினார் விளையாட்டும் உங்களை மீண்டும் நேசிக்க தொடங்கும் என்பதை சொல்கிறேன்.
Arjun, today you have taken another important step in your journey as a cricketer. As your father, someone who loves you and is passionate about the game, I know you will continue to give the game the respect it deserves and the game will love you back. (1/2) pic.twitter.com/a0SVVW7EhT
— Sachin Tendulkar (@sachin_rt) April 16, 2023
நீங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்துளீர்கள். அதனை நீங்கள் தொடர்ந்து செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் ஆரம்பம். வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார். சொல்லப்போனால் மகனும் அவருடைய தந்தையும் ஒரே அணிக்காக விளையாடியது இதுவே ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாகும். அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4.98 பொருளாதாரத்துடன் 8 விக்கெட்டுகளையும், 6.60 பொருளாதாரத்துடன் 9 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
You have worked very hard to reach here, and I am sure you will continue to do so. This is the start of a beautiful journey. All the best! 👍💙 (2/2)
— Sachin Tendulkar (@sachin_rt) April 16, 2023
அவரது சிறப்பு என்னவென்றால், ODI மற்றும் T20 ஆகிய இரண்டிலும் அவரது பந்துவீச்சு இதுவரை சிக்கனமாக இருந்தது. இதன் மூலம் ரஞ்சியில் பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் சிறந்த ஆல்ரவுண்டராக வரலாம் என்று தோன்றுகிறது. முதல் தர கிரிக்கெட்டில் அர்ஜுன் விக்கெட்டுகளைப் பற்றி பேசுகையில், அர்ஜுன் 3.42 பொருளாதாரத்துடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் ஒரு சதம் உட்பட 223 ரன்கள் எடுத்துள்ளார். 120 என்பது அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.