அறிமுகமான இரண்டு போட்டிகளில் மாபெரும் சாதனயை சமன் செய்த இந்திய அணியின் இளம் சிங்கக்குட்டி சாய் சுதர்ஷன்.
இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத
இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு சிறப்பாகவே கை கொடுத்தது என்று சொல்லலாம். 46.2 ஓவர்களில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே இந்திய அணியால் 211 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் முதல் போட்டியில் சொதப்பியது போலவே இன்றும் அவர் 4 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 83 பந்துகளில் 62 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 56 ரன்களும் மற்றும் அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை மட்டுமே அடித்து இருந்தன. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
இந்த ஒரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் இந்திய அணியின் 36 வருட கால சாதனயை அவர் இன்று சமன் செய்துள்ளார். அந்த சாதனை என்வென்று பார்த்தல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பான பேட்டிங் மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் அவர் அரை சதத்தை அவர் கடந்து இருந்தார். மேலும் அவர் இன்று நடந்த போட்டியிலும் 83 பந்துகளில் 62 ரன்களும் அவர் அடித்து இருந்தார்.
இதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்ததன் மூலம் நவ்ஜோத் சிங் சிந்து சாதனயை தற்போது அவர் சமன் செய்துள்ளார். தற்போது அற்புதமாக விளையாடி வரும் சாய் சுதர்ஷன் இன்னும் 10-15 ஆண்டுகள் இந்திய அணியில் இருப்பார் என்று இர்பான் பதான் கூறியது சரி என்பது போல அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.