சாய் சுதர்சன் நோ பாலில் ஆட்டமிழந்தாரா? அம்பயரின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்.

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்

By ·

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 352 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த சாய்ம் ஆயுப் 59 ரன்களும் பஃர்கான் 65 ரன்களையும் அதிரடியாக அசத்தினார்கள். இவர்களுக்கு பின் களமிறங்கிய பாஸ்கிதான் வீரர்கள் இந்திய பவுலர்களை பறக்க விட்டனர். மேலும் பாஸ்கிதான் அணியில் தாயப் தாஹிர் 45 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 12 பவுண்டரி 4 சிக்ஸருடன் 108 ரன்கள் விளாசினார்.

இதனால் பாஸ்கிதா அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை விளாசியது. அதைத்தொடர்ந்து 353 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை அடித்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமிதா நிலையில் அர்சத் இக்பால் வீசிய பந்தில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் இங்கே தான் பெரிய பிரச்சனையே பிறந்தது. ஏனென்றால் சாய் சுதர்சன் எதிர்கொண்ட அந்த பந்தானது எதிர்பார்த்ததை விட அதிக பவுன்ஸ் ஆகி வந்ததால் நோபால் இருக்குமோ என்று கருதிய நடுவர்கள் 3வது நடுவருக்கு சென்றனர். அப்படி அந்த வீடியோவில் பார்க்கும் போது பாகிஸ்தான் பவுலரின் கால் வெள்ளை கோட்டுக்கு வெளியே இருந்தது போன்று தெரிந்தது. இதனால் சாய் சுதர்சன் நாட் அவுட் என்று நினைத்தனர்.

ஆனால் 3ஆம் அம்பயர் அவுட் கொடுத்தார். ஏனென்றால் பவுலர் காலின் சிறிய பகுதியாவது வெள்ளைக் கோட்டுக்கு உள்ளே இருந்தால் அது நோ பல் கிடையாது எனவே அமபயர் அவுட் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். மேலும் 3ஆம் அம்பயர் வங்கதேசத்தைச் சேர்ந்த மோர்சத் அலி கான் என்பவர் என்பதினால் பாஸ்கிதானுக்கு ஆதரவாக பேசுவதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற்றனர்.

இந்நிலையில் போட்டியை பொறுத்தவரையில் இதற்கு பிறகு அபிஷேக் ஷர்மா 61 ரன்கள் ஆடி ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தார்கள். இதனிடையே தற்போது இந்திய அணியானது இந்த செய்தியை எழுதும் வரையில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே அடித்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை