சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவிக்க காரணம் என்ன – உண்மையை உடைத்த தோனியின் மனைவி.
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி அளவிற்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்டுளோரோ அதை விட ராணுவத்தின் மீதும் இந்திய நாட்டின் மீதும் அதிக மரியாதையை தோனி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் முன்னரெல்லாம் அணியில் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இந்திய ராணுவத்தின் உடையின் நிறத்தில்
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி அளவிற்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்டுளோரோ அதை விட ராணுவத்தின் மீதும் இந்திய நாட்டின் மீதும் அதிக மரியாதையை தோனி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் முன்னரெல்லாம் அணியில் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இந்திய ராணுவத்தின் உடையின் நிறத்தில் இருக்கும். மேலும் தன்னுடைய பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் தனக்கு இந்தியா தான் முதலில் பின்னர் தான் மற்றவை என்று குறி தொடர் முழுவதையும் விளையாடிவிட்டுதான் தன்னுடைய குழந்தையை பார்க்க சென்றார்.
மேலும் இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கெளரவப் பதவியைப் பெற்றுள்ள தோனி, மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற மதிப்புமிக்க விளையாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக சச்சினுக்கு நிகரான தரத்தையும் மதிப்பையும் கொண்டிருந்ததால் மிகப்பெரிய வழியனுப்பு போட்டியில் ரசிகர்களுக்கு முன்னிலையில் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்து
ஆனால் தோனி வித்தியாசமான முடிவு எடுப்பவர் என்பதினால் கடந்த 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தில் இரவு 7.29 மணிக்கு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது யாராலும் மறக்க முடியாததாக தோனி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தது இன்றும் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய அரசின் விருது கிடைத்த போது அதை ராணுவ உடையில் சென்று குடியரசு தலைவருக்கு சல்யூட் அடித்து வாங்கினார்.
அத்துடன் இந்திய ராணுவத்தில் கொடுக்கப்பட்ட உயரிய பதவியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாட்டுக்காக பங்காற்றி வந்த அவர் தேசப்பற்றின் காரணமாகவே சுதந்திர தினத்தில் ஓய்வு முடிவை அறிவித்திருப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் தோனியின் மனைவி வி சாக்ஷி தன்னுடைய கணவர் சுதந்திர தினத்தில் ஓய்வு பெற்ற காரணம் குறித்து பெய்யுளார்.
அவர் கூறுகையில் நாடு சுதந்திரமடைந்த தினமும் தம்முடைய அம்மா தேவகி தேவி அவர்களின் பிறந்த தினமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பதாலேயே அந்த நாளில் தோனி ஓய்வு முடிவை அறிவித்ததாக அவருடைய மனைவி சாக்சி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் கூறுகையில் “அது அவருடைய அம்மாவின் பிறந்த நாளாகும். என்னுடைய மாமியாரை நான் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக தான் சந்தித்தேன். ஆனால் இன்று எங்களுடைய நண்பர்களை போல் நல்ல பிணைப்பு இருக்கிறது
நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். முன்பெல்லாம் தோனி விளையாடுவதற்காக வெளியில் இருந்த போது எனக்கு அவர்கள் அந்நியர்களாக தெரிந்தனர். ஆனால் தற்போது எங்களுடைய நல்ல உறவு வளர்ந்துள்ளது. தற்போது எனக்கு அவர்கள் தான் பெரிய ஆதரவாக இருக்கிறார். இப்போது அவரின் அம்மாவுடன் ஒரே வீட்டில் இல்லாமல் இருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.