இந்த வீரரை மீண்டும் உலக கோப்பைக்கு கொண்டு வாருங்கள் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கொடுக்கும் ஐடியா.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த தொடரை பொருத்தவரையில் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்தியா இந்த கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஏனெ

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த தொடரை பொருத்தவரையில் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்தியா இந்த கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்விக்கு பிறகு இரண்டாவது வாய்ப்பாக இது வைத்திருப்பதினால் இதை மாட்டும் தவற விட்டார் பெரும் விமர்சனத்திற்கு இந்திய அணி உள்ளாகும்.

அதே நேரத்தில் இந்திய அணியில் சில பிரச்சனைகளும் இருக்கின்றனர். ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில் அவர் தற்போது மீண்டும் இந்திய அணியில் நுழைய பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் இந்தியாவிற்கு மிடில் ஆர்ட்டரில் பலமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் காயம் காரணமாக இந்த உலக கோப்பையில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் இல்லாதது இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் உருவாக்கியது என்று அனைவருக்கும் தெரியும். இதனால் இவர்களின் இடத்தை பூர்த்தி செய்ய இந்திய அணி பல வீரர்களின் அந்த இடங்களில் விளையாட வைத்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு ஐடியா கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்.

அவர் கூறுகையில் “விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா விளையாடவில்லை இதனால் மற்ற வீரர்கள் தனித்தனியாக இருந்தார்கள். விராட் மற்றும் ரோஹித் ஷர்மா இணைந்து விளையாடுவதை அவர்கள் மிஸ் செய்தார்கள் என்றே சொல்லலாம். இதுக்கு முன்னர் தோனி மற்றும்பிற முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் போது, ​​சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர் அல்லது யுவராஜ் சிங் பேட்டிங்கை கவனித்துக்கொள்வார்கள். ஆனால் தற்போதைய வீரர்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களை நிலைநிறுத்த முடியவில்லை.

இந்த பிரசனைக்கு உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா ஒரு தீர்வை கொண்டுவர வேண்டும். “ஒரு நாள் போட்டிகள் விளையாடும் விதத்தில் புதிய வீரர்கள் அடிக்கடி சரியாக செயல்பட முடியாவிட்டால் நீங்கள் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்கலாம் என்றார் சல்மான் பட்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் ஒருவேளை ரோஹித் சர்மா விராட் கோலியுடன் 4-வது இடத்தில் இறங்கலாம். பிறகு நீங்கள் முடியும் சூர்யகுமார் மற்றும் KL ராகுல் போன்ற மற்ற வீரர்ககளை அடித்தடுத்து களமிறக்கலாம். இந்திய அணியில் 3-4 வீரர்கள் தொடக்க வீரர்களாக விளையாடுகிறார்கள், ஆனால் அவர்கள் கீழே பேட்டிங் செய்ய யாரும் போது அவர்களின் செயல்பாடு ஒரே மாதிரியாக இல்லை என்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை