நீங்க இன்னும் கத்துக்கணும் தம்பி – நட்சத்திர வீரரின் பலவீனம் குறித்து பேசிய சல்மான் பட்

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் அனைத்து அணிகளுமே கிட்டத்தட்ட 3 போட்டிகள் விளையாடி விட்டனர்.இதனால் அவர்களின் அணியின் சாதகம் எது பாதகம் எனது என்பது குறித்து நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் உலக கோப

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் அனைத்து அணிகளுமே கிட்டத்தட்ட 3 போட்டிகள் விளையாடி விட்டனர்.இதனால் அவர்களின் அணியின் சாதகம் எது பாதகம் எனது என்பது குறித்து நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் பிரம எதிரி அணியான பாகிஸ்தான் அணி மீது பலரும் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர்.

குறிப்பாக அவர்களின் பந்துவீச்சில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்தது முடிந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை இந்தியா சுலபமாக எதிர்கொண்டது. ஆனால் உலக கோப்பை போட்டியில் அது கண்டிப்பாக மாறி நல்ல ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் என்பது இந்தியாவிற்கு எதிராக பலிக்காமல் போனது.

அதே போல பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ண்டு நாலாபுறமும் ரன்களை விளாசினார். இதனால் பாகிஸ்தான் பந்துவீச்சு மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி குறித்து பலவித விமர்சனம் எழுந்த நிலையில் தான் முன்னாள் பாக் வீரர் சல்மா பட் அதிரடி கருத்து ஒன்றி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் “புதிய பந்தில், குறிப்பாக முதல் மூன்று அல்லது நான்கு ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்பெல்களை பார்க்கும்போது, ​​அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பந்து பழையதாகிவிட்டது என்றால் சாதாரண பந்துவீச்சாளராகிவிடுவார். அவருக்கு ஆற்றல் உள்ளது மற்றும் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்கிறார். எனவே அவர் மிகச் சிறந்த மற்றும் முழுமையான பந்துவீச்சாளராக மாறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்று கூறியுள்ளார் சல்மான் பட்.

மேலும் ரிஸ்வான் மைதானத்தில் வழிபாடு செய்தது குறித்து பேசிய அவர் கூறுகையில் “எந்தவொரு தனிமனிதனும் எங்காவது நின்று தன் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாலோ, அல்லது அவனுடைய படைப்பாளரோடு அவனுக்கு என்ன தொடர்பு இருந்தாலும் அது அவருடையது. யாரும் இதைப் பற்றி விவாதிக்கவோ அல்லது யாரையாவது வழிபடுவதால் பிரச்சனையோ செய்யக்கூடாது. அதுதான் நாம் வாழ வேண்டிய உலகம் என்று கூறியுள்ளார் சல்மான் பட

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை