தோனி இருந்த வரையில் தான்… 2000தில் இருந்த ஆஸ்திரேலியா போல கிடையாது – முன்னாள் பாக் வீரர் விமர்சனம்.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டு அணிகளுமே மோதிக்கொள்ளும் நிகழ்வு இந்த வரும் 5 முறை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில் உலக கோபோபைக்கு முன்னதாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இருக்கின்றனர் ரசிகரக்ள். இந்த நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் சல்மான் பட் இந்தியா குறித்தும் ஆஸ்திரேலிய அணி குறித்தும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ” தற்போது சோதனைகள் செய்வதற்கான நேரமில்லை. ஏனெனில் 2000ஆம் ஆண்டு காலகட்டங்களில் அதிகப்படியான சூரிய வெளிச்சத்தில் தாங்க முடியாத வெப்பத்தில் தடுமாறினாலும் ஆஸ்திரேலியாவை போன்ற அணியை அவர்கள் (இந்தியா – பாகிஸ்தான்) கொண்டிருக்கவில்லை”. ஒரு காலத்தில் ஆஸ்திரேலியர்கள் புதிய வீரர்களை களமிறக்கியும் பழைய வீரர்களை வைத்தும் வெற்றி கண்டனர். ஆனால் தற்போது இந்த 2 அணிகளுமே அந்தளவுக்கு தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி நடக்கும் நாட்களில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று சொல்லலாம். ஆஸ்திரேலிய அணியானது இந்த அணிகளை விட பல மைல்கள் முன்னால் இருந்தது. ஆரம்பத்தில் ஐந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், ஒரு இன்னிங்சில் 275-300 ரன்கள் எடுத்திருக்க முடியும். இது ஒரு கனவு அணியாகும். ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் அப்படி கிடையாது.
தோனியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இப்போதைக்கு இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ரோஹித் அல்லது கோலி பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றால், ஒரு நல்ல பந்துவீச்சு வரிசைக்கு எதிராக அவர்களுக்கு போட்டியானது மிகவும் கடினமாக இருக்கும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் பலமான பந்துவீச்சு அணியை வைத்திருக்கிறார்கள் என்றார் சல்மான் பட்.