“ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை” – பெருந்தன்மையாக பேசிய சாம் கரன்.

ஐபிஎல் 2023தொடரில் 31வது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த அற்புதமான போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த பஞ

By ·

ஐபிஎல் 2023தொடரில் 31வது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த அற்புதமான போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் மிகப்பிரமாதமாக விளையாடி 214 ரன்கள் குவித்தனர். சொல்லப்போனால் 16 வது ஓவரில் மாறுமே 31 ரன்கள் கிடைத்து.

இந்நிலையில் 215 ரன்கள் என்ற இமால இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியால் 215 என்ற இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்துவீசிய பந்துவீச்சாளர் அர்ஷிதீப் சிங் மிகவும் சிறப்பாக பந்துவீசி இரன்டு விக்கெட்டுகளுடன் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் பஞ்சாப் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு போட்டியின் விருது வழங்கும் விழாவில் பேசிய பஞ்சாப் கேப்டன் சாம் கரன் கூறுகையில் ஒரு வீரருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறாமல் ஒட்டுமொத்த அணிக்கும் வெற்றியை தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது “இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. மைதானமும் அருமையாக இருந்தது. இங்குள்ள சுற்றுச்சூழல் நம்பமுடியாதது. இந்த வெற்றி எங்களுக்கு அதிக தன்னமிக்கையை கொடுத்திருக்கிறது.

இந்த போட்டியில் எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என்று நினைத்துப்பார்க்கவில்லை ஏனென்றால் எங்களுடைய அணியின் வீரர்கள் மிகவும் அருமையாக செயல்பட்டார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேட்டான் ஷிக்ர் இல்லாமல் அணியை வழிநடத்துவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாம் கரன் “கேப்டனான ஷிகர் இல்லாமல் அவரின் பெரிய பொறுப்பை நாங்கள் ஏற்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எங்ளின் குழு மிகவும் அருமையாக ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். ஷிகர் விரைவில் உடல் நலம் பெறுவார் என்றார் கரன்.

மேலும் அணியின் செயல்பாடு குறித்து சாம் கரன் கூறுகையில் “7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளோம் அது மோசமான இடமும் கிடையாது. நிர்வாகத்தினரிடமும் அப்பகுதி மக்களிடமும் பெரும் ஆதரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. அணியின் வென்றார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்னும் மிராயை போட்டிகள் விளையாட வேண்டியிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விளையாட்டை ரசித்து விளையாட வேண்டுமே தவிர நம்மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றார் சாம் கரன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை