வீடியோ : காற்றில் பறந்து அற்புதமான கேட்ச்சை அசால்ட்டாக பிடித்த சந்தீப் சர்மா.

ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பிரமாதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த போட்டியில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்ட

By ·

ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பிரமாதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த போட்டியில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டனர். அந்த வகையில் யுவேந்திர சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை படைத்தவர் ஏற்ற சாதனையை படைத்தார்.

மேலும் இரண்டாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி பேட்டிங்கிலும் சிறப்பாக பேட்டிங் செய்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைத்த பந்துகளில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இப்படி பௌலிங்கிலும், பேட்டிங்கிலும் அற்புதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீலடிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

அதாவது டாஸை வென்று முதலில் பந்துவீசிய ராஜஸ்தான் அணி பந்துவீசுகையில் முதல் இன்னிங்கில் ஐந்தாவது ஓவரின் போது ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் முதல் பந்தை போல்ட் ஃபுல் லெந்த்தில் வேகமாக வீச அதை கவர்ஸ் எல்லைக்கு அப்பால் அடிக்க முயற்சி செய்தார் குர்பாஸ்.

ஆனால் அப்படி வேகமாக வந்த பந்தை பீல்டிங் 30 யார்டு உள்ளே இருந்த சந்தீப் ஷர்மா சிறுத்தை போல் பறந்தது பந்தை அற்புதமாக பிடித்தார். மைதானத்தில் இருந்த அனைவருமே இந்த அற்புதமான கேட்சை பார்த்து ஆச்சரியப்பட்டனர். சந்தீப் சர்மாவின் இந்த அற்புதமான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பொடியை பற்றி பார்க்கையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வது ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் 150 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் வெற்றி பெற்றது. இதன் முலம் புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறியது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை