கடைசியில் அவர்களின் முடிவு தான் இறுதி – மூன்றாம் நடுவரின் சர்ச்சையான முடிவு குறித்து சங்கக்கார கருத்து.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடி

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த முறை ராஜஸ்தான் அணியானது மற்ற அணிகளை காட்டிலும் ஒரு பலமான அணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானை அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்ய இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட டெல்லி அணி அற்புதமாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை அடித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த அதிரடியா விளையாடினார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து பலமாக நின்ற நேரத்தில் திடீரென சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதன் போது அவர் 46 பந்துகளில் 86 ரன்களை முடித்திருந்தார். சஞ்சு விக்கெட்டிற்கு பிற்காடு ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் விழுக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் அணி.

இந்நிலையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அப்பர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி இருந்தாலும். ஒருவேளை சஞ்சு சாம்சன் அதே பார்மில் அவுட் ஆகாமல் விளையாடி இருந்தால் கண்டிப்பாக டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கும். இதனாலேயே இது மிகப்பெரிய சர்ச்சையான ஒரு விஷயமாக மாறியுள்ளது. மேலும் மூன்றாம் நடுவர் குறித்தும் விமர்சனங்கள் வருகின்றது.

ஏனென்றால் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி பக்கத்தில் இருந்த சாய் ஹோப் கேட்ச் பிடித்தார். ஆனால் அவரது கால் பவுண்டரி கோட்டில் பட்டது போல இருந்தது. இதனால் 3ஆம் நடவரிடம் செல்ல அவர் அவுட் கொடுத்தார். இதனால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கும் அம்பவர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் தான் இந்த விஷயம் குறித்து ராஜஸ்தானை அணியின் பயிற்சியாளர் சங்ககாரா பேசியுள்ளார். அவர் கூறியதாவது : இந்த விஷயம் ரீப்ளே மற்றும் கோணங்களைப் பொறுத்தது. சில சமயங்களில் கால் பவுண்டரியை தொட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இதனால் மூன்றாவது நடுவருக்கு தீர்ப்பு வழங்குவது கடினமாக இருந்தது. மேலும் ஆட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்த போது இந்த மாதிரியான நிகழ்வு நடந்தது.

எங்களுக்கு வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன, ஆனால் நாள் முடிவில் மூன்றாம் நடுவர் எடுத்த முடிவில் தான் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும். அதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அதை நடுவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்ததை பொருட்படுத்தாமல், ஆட்டத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். டெல்லி அணி இன்று சிறப்பாக விளையாடினார்கள் என்றார் சங்ககாரா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை