அஸ்வினுக்கு உலக கோப்பையில் இடமா? மீண்டும் பரபரப்பான கருத்து தெரிவித்த சஞ்சய் மஞ்சுரேக்கர்.
வரலாற்று சிறப்பவுமிக்க உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆட்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. குறிப்பிட தக்க வகையில் அணைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்த போட்டிகளுக்கான அட்டவணையும் உலக கோப்பை விளையாட 100 நாட்கள் இருக்கு இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட
வரலாற்று சிறப்பவுமிக்க உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆட்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. குறிப்பிட தக்க வகையில் அணைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்த போட்டிகளுக்கான அட்டவணையும் உலக கோப்பை விளையாட 100 நாட்கள் இருக்கு இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் போது உலக கோப்பையானது வானில் 1.2 லட்சம் அடி உயரத்திற்கு சென்றிருந்தது.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இதனால் இந்த உலக கோப்பையிலாவது இந்தியா வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அனைவரும் இருக்கின்றனர். அதே நேரத்தில் வரும் 2023 உலக கோப்பைக்கு இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக ஸ்பின்னர்களில் யார் இடம் பெறுவார் என்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
தற்போது உள்ள இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருக்கின்றனர். லெக் சப்பினராக சாஹல் இருக்கிறார். அதே நேரத்தில் சைனாமேன் பௌளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் குறிப்பிடும் வகையில் ஆஃப் ஸ்பின்னர் இடும்பெறவில்லை. இதனால் வரும் உலக கோபப்பை 2023 போட்டியில் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தான் அதற்கு பதிலளித்துள்ளார் சஞ்சய் மஞ்சுரேகர்.
அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கும் தாக்குதல் பந்துவீச்சாளராக இருந்தால் அவரை அணியில் எடுக்கலாம். ஆனால் நாம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பார்த்திருப்போம் அவருடைய பந்துவீச்சை பற்றி. அவர் ஒரு தற்காப்பு முறை பந்துவீச்சாளராக இருக்கிறார், சாஹல் போன்று எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுக்கும் பந்துவீச்சாளரா இல்லை. மேலும் இந்திய அணியில் ஆல்ரவுடரை பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
இந்த விஷயத்தை பொறுத்தவரையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அணியில் ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்த ஆல்ரவுண்டர் சூழ்நிலைக்கு தகுந்தது போன்று இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. நான் பல ஆண்டுகாலமாக பல ஆண்டுகளாக வீரர்களை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதன் படி நீங்கள் கடந்த 50 ஓவர் உலக கோப்பையில் வென்ற அணிகளை பார்த்தோம் என்றால் சரியாக பந்துவீச்சாளர்களும் சரியான பேக்டர்களும் பல அணிகளில் இருக்கின்றனர்.
அப்படி பேட்டிங்கிலும் பௌலிங் என இரண்டிலும் சரியாக செயல்படுபவரை விடவும் ஒன்றில் திறமையாக செயல்படுபவர் கொண்ட அணிகள் தான் பெரும்பாலும் வெற்றியடைந்தது. ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை கூறலாம். எனவே நாம் ஆல்ரவுண்டர்களை பற்றி பேசுகையில் இதனை மறந்துவிட கூடாது. வேண்டுமென்றால் ஒரு நல்ல பேட்டர் சிறப்பாக பந்துவீசுவார் என்றால் அவரை அணியில் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஆண்ட்ருவ் சைமன்ட்ஸ், யுவராஜ் சிங் போன்டர்வர்கள் என்றார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.