விராட் முன்ன மாதிரி கிடையாது.. ரோஹித்தும் விராட்டும் இந்த தப்ப மறுபடியும் செய்யாதிங்க – சஞ்சய் மஞ்சுரேகர்.

ஐபிஎல் 2024 தொடரானது முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் உலக கோப்பை 2024 தொடர்நது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கிறது. இதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது உள்ள இந்திய அணியின் மீது பலரும் தங்களது நம

By ·

ஐபிஎல் 2024 தொடரானது முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் உலக கோப்பை 2024 தொடர்நது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கிறது. இதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது உள்ள இந்திய அணியின் மீது பலரும் தங்களது நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். மேலும் தற்போத தான் ஐபிஎல் தொடரானது ,முடிவேந்தனால் இந்திய அணி நம்பிக்கையுடன் இருந்திறது.

மேலும் இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.

இருந்த போதிலும் இந்திய அணி கடந்த 10 வருடங்களாக எந்த உலக கோப்பை போட்டியிலும் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என ஏங்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். மேலும் கடந்த டி20 உலக கோப்பையை போல எந்த தவறும் செய்யக்கூடாது என்று இந்திய அணியும் பலவிதமான மாற்றங்களை செய்துள்ளது. இந்த நிலையில் தான் விராட் கோலி மற்றும் ரோஹித் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேகர்.

கடந்த 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்த அதே தவறுகளை ரோஹித்தும் விராட்டும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். விராட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே டி20 வீரர் அல்ல என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். அவர் ஆழமாக அறிந்திருக்க வேண்டும், நிச்சயமாக, ‘வெளியே சத்தம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அவரை ஒரு சிறந்த டி20 பேட்டராக மாற்றியுள்ளது என்றார் சஞ்சய் மஞ்சுரேகர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவின் பிரதிபலிப்பான அக்சர் படேலை விட நான் தனிப்பட்ட முறையில் அணியில் வருண் சக்ரவர்த்தியை விரும்புவேன். மீண்டும் ஐசிசி தேர்வுகளில் இந்தியாவின் எச்சரிக்கையான அணுகுமுறையை இந்தத் தேர்வு காட்டுகிறது. அக்சரின் பேட்டிங்கிற்கும் அவர் சேர்க்கப்பட்டதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. முகமது ஷமி இல்லாததால், நானாக இருந்தால் சுழல் தாக்குதலை வலுப்படுத்தியிருப்பேன் என்றார் மஞ்சுரேகர்.

டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :

ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை