“என்னிடம் பதில் இல்லை” – RCBக்கு எதிராக ராஜஸ்தானின் மோசமான தோல்விக்கு பிறகு பேட்டி கொடுத்த சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் 2023 தொடரின் 60 ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்கத்திலேயே விராட் கோலியின் விக்கெட் விழுந்தாலும் அதற்கு பிறகு சிறப்பாக ஆடிய ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 171/5 ரன்களை எடுத்தது. இதனை அடுத

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 60 ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்கத்திலேயே விராட் கோலியின் விக்கெட் விழுந்தாலும் அதற்கு பிறகு சிறப்பாக ஆடிய ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 171/5 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடி 59 ரன்கள் குவித்து படு தோல்வியை சந்தித்தது.

172 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் துரத்தத் தொடங்கியபோது, ​​​​ஆரம்பம் மோசமாக இருந்தது. ஜெய்ஸ்வால், பட்லர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதே நேரத்தில் சஞ்சு 4 ரன்களும், ஜோ ரூட் 10 ரன்களும் எடுத்தனர். இதற்குப் பிறகு ஹிட்மியர் 35 ரன்களில் இன்னிங்ஸ் விளையாடி நடுவில் இன்னிங்ஸைக் கையாண்டார், ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு ஒட்டுமொத்த அணியும் சரிந்தது 112 ரன்கள் விதியசத்தில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான்.

சஞ்சு சாம்சன் கூறியது :

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் “எங்கள் அணியில் முதல் மூன்று பேர் நிறைய ஸ்கோர் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் கடுமையாக முயற்சி செய்தோம் ஆனால் இது எங்களுடைய நாள் கிடையாது. விளையாட்டை விரைவில் புரிந்து கொண்டு பந்து மெதுவாக வந்ததினால் பவர் பிளேவில் அதிகமாக அடிக்க வேண்டியதிருக்கும் என்று நினைத்தோம். அதனால் தான் நானும், ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் மூவரும் அப்படி விளையாடினோம்.

ஆனால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டார்கள். எங்களுடைய இந்த ஸ்கோர் மிகவும் மோசமானது, பவர் பிளேவில் அதிகமாக ரன்களை அடித்தால் போட்டியை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். நான் விக்கெட்டுகள் விழும் போது எங்கே தவறு செய்தோம் என்பதை பற்றி யோசித்து கொண்டிருந்தேன். அதற்கு என்னிடம் இன்னும் பதில் இல்லை என்று நினைக்கிறேன்.

ஐபிஎல்லின் என்றாலே இதனை போன்ற சில வேடிக்கையான விஷயங்களைப் நாம் பல முறை பார்த்திருக்கிறோம். நாங்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்து தர்மசாலாவில் விளையாட்டைப் பற்றி சிந்தித்து கண்டிப்பாக அடித்த போட்டியில் வெற்றியடைய முயற்சிப்போம் என்றார் சஞ்சு சாம்சன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை