அந்த இடத்தில் தான் தவறு செய்து விட்டோம் -ராஜஸ்தான் தோல்விக்கு பிறகு சஞ்சு சாம்சன் கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023தொடரின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்

By ·

ஐபிஎல் 2023தொடரின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் மோசமான தொடக்கத்தை பெற்றது.

பட்லர் 8 மற்றும் ஜெய்ஸ்வால் 14 ரன்களில் ரன் அவுட் ஆக சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தவிர யாராலும் 20 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இந்நிலையில் 119 ரன்கள் இலக்கை துரத்த குஜராத் அணி களம் இறங்கியபோது ​​தொடக்கம் அபாரமாக அமைந்தாலும் 6 பவுண்டரிகள் அடித்த ஷுப்மான் கில் வடிவில் முதல் அடி விழுந்தது. 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அவருக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்து 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் சாஹா 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் உதவியுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 13.5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பிரசுக்கு பேசிய சஞ்சு சாம்சன் தங்கள் எப்படி தோல்வியுற்றோம் என்பதை பற்றி பேசியிருந்தார்.

சஞ்சு சான்சன் கூறியது :

சஞ்சு சாம்சன் கூறுகையில் “இது ஒரு கடினமான இரவாக இருந்தது எங்களுடைய அணிக்கு. பவர்பிளேயில் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நல்ல தொடக்கம் இல்லை. அவர்களின் பந்துவீச்சாளர்கள் நல்ல லைன் மற்றும் லென்த் பந்துவீச்சு மற்றும் மிடில் ஓவர்களில் சில முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார்கள், அந்த நிகழ்வினால் எங்களால் எதுவும் பெரிதாக செய்ய முடியவில்லை.

எங்களுடைய பேட்டிங்கை சரிபார்த்து, நாங்கள் உண்மையில் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோமா என்று தெரிந்து கொண்டு அதனை சரிசெய்ய வேண்டும். வரும் வாரங்களில் பல முக்கியமான போட்டிகள் வர இருக்கிறது, அந்த போட்டிகளில் வெற்றியடையவே நாங்கள் எண்ணுகிறோம் என்று கூறினார் சஞ்சு சாம்சன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை