அவர் நிதானத்தையும், பொறுமையையும் இழக்காமல் இளம் வயது தோனி போல இருக்கிறார் – கிரேம் ஸ்வான்.

ஐபிஎல் 2023 தொடரில் அணைத்து அணிகளுமே கிட்டத்தட்ட 80 சதவிகித போட்டிகளை விளையாடி விட்டது. மொத்தமாக நடக்கும் 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் 55 போட்டிகள் இதுவரையில் முடிந்திருக்கிறது. இதனால் எல்லா அணிகளுமே தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே தெரிந்து வைத்திருக்கின்றனர். கிட்டத

By ·

ஐபிஎல் 2023 தொடரில் அணைத்து அணிகளுமே கிட்டத்தட்ட 80 சதவிகித போட்டிகளை விளையாடி விட்டது. மொத்தமாக நடக்கும் 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் 55 போட்டிகள் இதுவரையில் முடிந்திருக்கிறது. இதனால் எல்லா அணிகளுமே தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே தெரிந்து வைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட சென்னை மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆஃபிற்கு ஏறக்குறைய சென்று விட்ட நிலையில் மற்ற அணிகளும் முதல் 4 இடங்களுக்காக போட்டியிட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஜியோசினிமாவின் ஐபிஎல் நிபுணரான கிரேம் ஸ்வான் சமீபத்தில் பேட்டி ஒன்றி பேசும் போது சில சுவாரசியமான விஷியங்களை கூறினார். அவர் பேசுகையில் ” ஐபிஎல்லில் அணைத்து அணிகளுமே சிறப்பாக விளையாடுகிறது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமாலாலும் தோற்கடிக்கலாம்.

நான் ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஐந்து முதல் ஆறு போட்டிகள் வரையில் பார்த்திருக்கிறேன். பொதுவாகவே எல்லா அணிகளையும் விட இரண்டு அணிகள் சிறப்பாக செயல்படும். அந்த இரண்டு அணிகளுமே வெற்றிக்காக போட்டியிடும். தற்போது வேண்டுமானால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகரமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அடித்த போட்டியில் எந்த அணியிடம் வேண்டுமானாலும் தோல்வி அடையாளம்.

ராஜஸ்தான் அணியை பற்றி பேசுகையில் “ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல்லில் நல்ல தொடக்கத்தை பெற்றது. ஆனால் கடந்த சில போட்டிகளாக வெற்றி பெற போராடி வருகிறது என்று சஞ்சு சாம்சன் பற்றியும் பேசினார். அவர் கூறுகையில் ” ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சுவிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால் அவர் ஒரு தலைவராகவும், நிலையான மூத்த வீரராகவும் கடந்த ஆறு ஆண்டுகளில் மாறினார்.

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஆறு முதல் ஏழு ஆட்டங்களில் ஒன்றும் செய்யாமல் பின்னர் ஒரு அற்புதமான விளையாட்டை விளையாடுவார். இப்போது அவர் ராஜஸ்தானுக்கு கிட்டத்தட்ட மிஸ்டர் டிப்பண்டபிள் என்று நினைக்கிறேன்.

சஞ்சு சாம்சன் மிகவும் அமைதியானவர், மிகவும் உறுதியானவர், கிட்டத்தட்டஅவர் ஒரு இளம் எம்எஸ் தோனி போன்றவர். எனக்கு தெரிந்தவரையில் அவருடைய கேப்டன்சியில். அவர் தன்னுடைய அமைதியை இழக்கவில்லை, பொறுமையையும் இழக்கவில்லை. மேலும் என்ன போட்டியில் நடக்கிறது என்பதை அவர் அறிந்து அதற்கு தகுந்தாற் போல செயல்படுகிறார் என்றார் ஐபிஎல் நிபுனர்கிரேம் ஸ்வான்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை