இஷான் கிஷானுக்கு பதிலா அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம், உலக கோப்பைக்கும் தயாரா இருக்காரு – முகமது கைஃப் அறிவுரை.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ​​பார்படாஸில் நடந்த முதல் ஆட்டத்தில் வென்ற பிறகு, கடைசி இரண்டு ஆட்டங்களில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டதால், இந்தியா அணிக்கு அது ஒரு சோதனையாக இருந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் செவ்வாய்க் கிழமை டி

By ·

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ​​பார்படாஸில் நடந்த முதல் ஆட்டத்தில் வென்ற பிறகு, கடைசி இரண்டு ஆட்டங்களில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டதால், இந்தியா அணிக்கு அது ஒரு சோதனையாக இருந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் செவ்வாய்க் கிழமை டிரினிடாட்டில் நடந்த தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விரைவான அரைசதம் அடித்ததார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய சாம்சன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் செயல்பட பெரும் அழுத்தத்தில் இருந்தார். ஆனால் அந்த அழுத்திலும் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்ததால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் குவிக்க உதவியது. இந்நிலையில் சஞ்சு சாம்சனின் இந்த கம்பேக் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் “சஞ்சு சாம்சன் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். துவக்கத்திலேயே இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்.

மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும். ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும்.

நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா போட்டியை பார்தீகள் என்றால் அவருக்கு தெரியும் இந்த போட்டியில் முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது என, தான் சரியாக விளையாடவில்லை என்றால் தன்னால் உலக கோப்பை போட்டியில் தான் இடம்பெற மாட்டேன் என்று அவருக்கு தெரிந்தது. மூன்றவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் அழுத்தத்தில் விளையாடிய விதமே சொல்லுகிறது அவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இருக்கிறீர் என்டர் கூறினார் முகமது கைஃப்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை