“துண்டு ஒரு முறை தான் தவறும்” ஒரு போட்டியில் சொதப்பி இருந்ததாலும் கிடைத்த மாற்றுமொரு வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஞ்சு சம்சன்.

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத

By ·

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது.

மூன்றாவது இன்றைய போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக அமைந்தாலும் சாம்சனின் ஆட்டம் அதனை சிறப்பாக எடுத்து செல்ல விடவில்லை. இந்திய அணி 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்து இருந்தன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் அவர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.

ரஜத் படிதார் 22ரன்களிலும் சாய் சுதர்ஷன் 10 ரன்களிலும் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த இரண்டு வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறிய உடன் இந்திய அணியின் வீரர்கள் ரன்களை குவிக்க திணறியே வந்தனர். அதன் பின் திலக் வர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர். இறுதியாக இந்திய அணி 296 ரன்களை குவித்தது.ஒரு கட்டத்தில் இந்திய அணி 250 ரன்களை தொடுமா என்ற எண்ணம் இருந்த நிலையில் 296 ரன்களை குவிக்க உதவி செய்தனர்.

இந்திய அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களும் திலக் வர்மா 52 ரன்களையும் இறுதிகட்டத்தில் வந்த ரின்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து இருந்தனர். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடித்து இருந்தனர். இந்த தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனை இந்திய அணி மறந்து விட்டது என்றும் 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் ஆனால் அதன் பின் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த உலகக்கோப்பை போட்டியிலும் அதன் பின் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் பலர் இந்திய அணியை விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது அதிலும் அவருக்கு முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை இரண்டுவது மற்றும் இன்று கடைசி போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அவர் விளையாடிய முதல் போட்டியில் அவர் 12 ரன்னில் அவர் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். இந்த போட்டியிலும் அவர் அதே போல் சொதப்பி இருந்தால் அது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியில் தன்னை நிரூபித்துக்கொண்டார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை