ஐபிஎல் முன்ன மாதிரி எல்லாம் இல்ல.. எல்லாம் மாறிடுச்சு – வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சன் கொடுத்த பேட்டி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றைய போட்டியில் விளையாடியது. இதில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்வோமா என்ற கேள்வி டெல்லி அணியின் ரசிகர்களிடையே பெரும்பான்மையாக இருந்தது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சற்று நின்று நிதானமாக விளையாடி பவர்ப்ளே ஓவரில் ரன்களை குவிக்க தவறிவிட்டனர்.ஆனால் அதன் பின்பு வந்த ரியான் பராக் மற்றும் ஜூரேல் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கு எட்ட உதவி செய்தனர்.
அவர் அதிகபட்சமாக 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அதற்கு அடுத்த இடத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதில் அவர் மூன்று சிக்சர்களை அவர் அடித்திருந்தார். அதன் பின்பு தனது அதிரடியாக ஆட்டத்தால் ஜூரேல் 12 பந்துகளில் 20 ரன்களை அடித்து இருந்தார். அதில் அவர் மூன்று பவுண்டரிகளை அடித்திருந்தார்.
எனவே ராஜஸ்தான் ராயல் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி வந்தாலும் அதன் பின் பராக் மற்றும் ஜூரேல் சிறப்பாக செயல்பட்டதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி அணியும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பி இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருப்பினும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் குறுக்கையில் “நாங்கள் தொடங்கிய விதம், முதல் பத்து ஓவர்கள், நாங்கள் ரோவ்மேன் போல இருந்தோம். ஐபிஎல் போட்டி மாறி வருகிறது. எனவே நீங்கள் பேட்டிங் செய்ய தயாராக இருங்க வேண்டும். நாம் அனைவரும் நெகிழ்வாக இருக்க வேண்டும். முன்பு இருந்த போட்டி என்பது சுமார் 11 வீரர்களை பற்றியதாக இருந்தது. இப்போது அது 15 வீரர்களைப் பற்றியதாக மாறிவிட்டது. .இம்பாக்ட் ப்ளேயரை முடிவு செய்வதற்கு முன் நானும் சங்காவும் 15வது மற்றும் 17வது ஓவருக்கு இடையில் நிறைய கலந்துரையாடினோம்.
வீரர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அது. எனவே அதை பார்த்துவிட்டு உங்கள் முடிவை எடுக்க வேண்டும். சாண்டி அமைதியாக இருப்பதையும் அவேஷ் கூட இருந்ததையும் பார்த்தேன். அதனால் நான் அவர்களுடன் சென்றேன். கடந்த சில வருடங்களில் ரியான் பராக் ஒரு பெரிய பெயர் எடுத்து வைத்திருக்கிறார். நான் எங்கு சென்றாலும், மக்கள் அவரைப் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சிறப்பான ஒன்றைக் கொடுக்க முடியும் என்றார் சஞ்சு சாம்சன்.