வெற்றி பெற்றும் வருத்தத்தில் சஞ்சு சாம்சன். அபராதத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன்.

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36

By ·

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36 பந்துகளில் 52 ரன்களை அடித்த நிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஹெட்மயர் 18 பந்துகளிலே  30 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.     

176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அந்த விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி 19 பந்துகளிலே 31 ரன்களை அடித்த நிலையில் அஷ்வின்னிடம் ஆட்டமிழந்தார். டுபே மற்றும் மொயின் அலி சொற்ப ரன்களிலே அவுட் வெளியேறினார்.

அதன் பின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ராயுடு 1 ரன்னை மட்டுமே எடுத்து சஹலிடம் விக்கெட்டை இழந்தார்.சென்னை அணிக்கு மேலும் மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் நிதனமாக ஆடிய கான்வே 37 பந்துகளில் 50 ரன்களை அடித்தார்.இந்த நிலையில் அவரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.அரை சதம் அடித்த அடுத்த பந்திலே விக்கெட்டை சஹலிடம் இழந்தார்.கேப்டனாக 200 வது போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய தல தோனி 17 பந்துகளில் 32 ரன்களை அடித்தார்.அந்த ஓவரில் தான் சஞ்சு சாம்சன்க்கு  ஏற்பட்ட சோகம்.

அபாரததில் அணியின் கேப்டன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியை ராஜஸ்தான் அணி கடைசி ஓவர் கடைசி பந்து வரை எடுத்து சென்று போட்டியில் வெற்றி பெற்றன.இந்த வருடத்தில் 2 தோல்வியை பதிவு செய்தது சென்னை அணி.

கடைசி ஓவரை தோனிக்கு வீசிய ராஜஸ்தான் அணியின் சந்திப் சர்மா ஆரம்பத்திலே இரண்டு அகல பந்துகளை வீசினார்.அதனால் அவர் அந்த ஓவரை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டார். இதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு க்கு ருபாய் 12 லட்சத்தை அபராதம் அளித்தது ஐபிஎல் நிர்வாகம்.வெற்றி பெற்றும் மகிழ்ச்சி இல்லாமல் சஞ்சு சாம்சன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை