CSKவை வீழ்த்த போட்ட திட்டம் இதுதான் – வெற்றிக்கு பிறகு மனம் திறந்த சஞ்சு சாம்சன்.
ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நேற்று சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. சஞ்சுவின் முடிவை சரியென நிரூபித்த அந்த அணி, யஷஸ்வியின் அபாரம
ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நேற்று சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. சஞ்சுவின் முடிவை சரியென நிரூபித்த அந்த அணி, யஷஸ்வியின் அபாரமான பேட்டிங்கால் அரைசதத்தால் 202 ரன்களை எடுக்க முடிந்தது.
இந்த இலக்கை துரத்திய சென்னை அணி சிறப்பான தொடக்கம் பெற்றதுடன், ருதுராஜின் அதிரடியான பேட்டிங்கால் சென்னை அணியின் ரன்ரேட்டும் சிறப்பாக உயர்ந்து வந்தது.ஆனால் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ தொடங்கியதும், போட்டி அணியின் கையை விட்டு நழுவி சென்றது. இறுதியில் சிவம் துபே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற முயற்ச்சி. இருப்பினும் இறுதியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு யஷஸ்வி சிறப்பான ஆட்டத்தையே தொடர்ந்து வந்தார். அதே பாணியை இந்த போட்டியிலும் மேற்கொண்டார். அணிக்காக அதிக ரன் குவித்தவர் என்ற வீரர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இதற்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் “எங்களுடைய அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதோடு இது ஜெய்ப்பூரில் முதல் வெற்றியும் கூட. இந்த போட்டியில் டாஸ் வென்றதும் பேட்டிங் செய்ய காரணம் இது வான்கடே மைதானமோ அல்லது சின்னசாமி மைதானமோ அல்ல. ஏனென்றால் இந்த மைதானத்தில் ஜெஸிங் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். எனவே தான் நாங்கள் டாஸ் வென்றதும் பேட்டிங் செய்ய முடிவு செய்தோம்.
Sanju Samson said – "The way Yashasvi Jaiswal, Devdutt Padikkal and Dhruv Jurel batted in yesterday's match was outstanding, the mindset of attack, attack and attack is something we will keep promoting in the dressing room".
— CricketMAN2 (@ImTanujSingh) April 28, 2023
எங்களது திட்டத்தின் படி நாங்கள் முதலில் பேட்டிங் செய்தலும் கூட எங்கள் அணியின் இளம் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக இந்த போட்டியில் செயல்பட்டார்கள். அதுவும் குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தார். அடித்து ஆடவேண்டும் என்று போட்ட திட்டம் சரியாக வந்தது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வீரர்களும் எங்களது நிர்வாகமும் முக்கிய காரணம் என கூறினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.