இது நல்ல இலக்கு தான்…நாங்கள் இந்த இடத்தில் தான் தோல்வியை தழுவினோம் – சஞ்சு சாம்சன் உருக்கமான பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. ராஜஸ்தான் அணிஇதற்க்கு முன்பு நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் குஜராத் அணி ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 20வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை அடித்து இருந்தனர். ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் பட்லர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினாலும் அதன் பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரியான் பாராக் அதிரடியை காட்ட தொடங்கினார். ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களையும் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களையும் அடித்து இருந்தனர். போட்டியின் இடையில் 180ரன்களே வருமா என்ற கேள்வி இருந்தது.
ஆனால் அதன் பின் வந்த ஹெட்மெயிர் 5 பந்துகளில் 13 ரன்களை அவர் அடித்து இருந்தார் . எனவே தான் ராஜஸ்தான் அணி 196 ரன்களை அடித்து குவித்து இருந்தது. 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்ததது. ஒரு பக்கம் கேப்டன் கில் மட்டும் தனியாக நின்று போராடி இருந்தார். இருப்பினும் அவராலும் போட்டியை இறுதி வரை எடுத்து செல்ல முடியவில்லை. அவர் 44 பந்துகளில் 72 ரன்களை அடித்து இருந்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதற்க்கு அடுத்த படியாக சாய் சுதர்ஷன் 29 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே அவர் அடித்து இருந்தார்.
இருப்பினும் இறுதியில் ராஷித் கான் மற்றும் திவெட்டியா இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஷித் கான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்பந்தை பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றி பெறவைத்தார். போட்டியின் இடையில் போட்டியை ராஜஸ்தான் அணி தான் போட்டியை கைப்பற்றியது என்று நினைத்து கொண்டு இருந்த நிலையில் இந்த இருவரின் பார்ட்னர்ஷிப் தான் அணியை வெற்றி பெற வைத்தது. திவாட்டியா 22 ரன்களும் ராஷித் கான் 24* ரன்களையும் அடித்து குஜரத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்
போட்டி குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், உண்மையைச் சொல்வதானால், இந்த நேரத்தில் பேசுவது மிகவும் கடினம். ஆட்டத்தில் தோற்ற பிறகு பேசுவதும், எங்கு தோற்றோம் என்று சொல்வதும் கடினமான வேலையாக கேப்டனுக்கு உள்ளது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, என்னால் சொல்ல முடியும். குஜராத் டைட்டன்ஸ் அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் போன்றவற்றுக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.
நான் பேட்டிங் செய்யும் போது, ஏதாவது 180 ரன்களை சண்டையிடும் ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். 197 என்பது வெற்றிகரமான ஸ்கோர் என்று நினைத்தேன். பனி இல்லை,எங்கள் பந்துவீச்சு தாக்குதல் மூலம், நாங்கள் அதை செய்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். 197 இலக்கு என்பது நல்ல இலக்கு தான் என்றும் அவர் கூறி இருந்தார்.