இன்னும் சில ஆட்டங்கள் இருகின்றது. இருப்பினும் இந்த வெற்றி எங்களை மேலும் எனர்ஜியை கொடுத்தது – சஞ்சு சாம்சன் பேச்சு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில் உள்ள மைதானத்தில்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது ராஜஸ்தான் ராயல் அணி இதற்க்கு முன்பு நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியைக் கண்டும் பெங்களூர் அணி இதற்கு முன்பு நடந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று மீதி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியின் கேப்டன் டு பிளசிசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். விராட் கோலி மட்டுமே ஒரு பக்கமாக நின்று போராடி தனது சததத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் கேப்டன் டு பிளசிசிஸ் 44 ரன்களை மட்டும் எடுத்திருந்தார். அதன் பின்பு வந்த வீரர்களாக நிலைத்து நின்று ரன்களை குவிக்க முடியவில்லை. 20 அவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்களை அடித்திருக்கிறார். அதில் 12 பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும்.
184 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்த சிறப்பாக விளையாடியது. ராஜஸ்தான் அணி ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை மட்டுமே இழந்து விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் எந்த ரன்கள் எடுக்கமால் வெளியேறினார். அதன் பின் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்த பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதில் ஜாஸ் பட்லர் ரன்களும் சஞ்சு சம்சன் 69 ரன்களையும் அடித்து இருந்தார். பெங்களூரு அணி சார்ப்பில் டாப்லீ இரண்டு விக்கெட்டுகளையும் டால் அம்ற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து இருந்தனர்.
இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி நான்காவது தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. இருப்பினும் அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் ரன்களை முடிக்கவில்லை. பந்துவீச்சும் அந்த அளவிற்கு சிறப்பாகவே இல்லை.பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களுக்கு 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதை தற்காத்து கொள்ளமுடியாமல் ரன்களை வாரி வழங்குவார்கள். அதற்க்கான சான்று இது போன்ற பல போட்டிகளை சான்றாக சொல்லலாம்
வெற்றி குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், 190 இலக்கு கீழ் அடிப்பது எளிதாக இருந்தது. இங்கு கொஞ்சம் பனிப் பொழிவும் இருந்தது. இன்னும் சில ஆட்டங்கள் உள்ளன, நாங்கள் நன்றாக பந்துவீசுகிறோம். மேலும் எங்களுக்கு ஒரு இடைவெளி கிடைத்துள்ளது, இது எங்களை சார்ஜ் செய்து புதியதாக வர உதவுகிறது. [RR ஒரு பேட்டிங் அல்லது பந்துவீச்சு பக்கமா?] பந்துவீச்சு 9 மற்றும் பேட்டிங் 8.7 என்று நினைக்கிறேன். ஜோஸுடன் இது சிறிது நேரம் ஆகும். அவர் பவர்பிளே மற்றும் சில பந்துகளை மிடில் கடக்க வேண்டும். என்றும் அவர் கூறி இருந்தார்.