“நாங்கள் இதை சரியாக செய்து இருந்தால் வெற்றி பெற்று இருப்போம்.” தோல்விக்கு இது தான் காரணம் – சாண்டோ.
நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. தோல்வி குறித்து பேசிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ. உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில் இன்று நடந்த பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியு
நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. தோல்வி குறித்து பேசிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ. உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில் இன்று நடந்த பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி எனவும் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் இரண்டு வெற்றியும் பெற்று இரண்டாவது இடத்திலிருந்து வருகின்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி அருமையாகவும் பந்து வீசினார்கள். பங்களாதேஷிற்கு ஆரம்பமே தடங்கலாக முதல் பந்தியிலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் நிதானமாக விளையாடி வந்த தன்சித் ஹசன் 16 ரன்களிலும்.மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அது பங்களாதேஷ் எனக்கு மிகவும் சோகமாக மாறியது.
அதன் பின்வந்த ஷாண்டோ 7 ரன்களில் வெளியேறினார். அணியின் கேப்டன் ஷாகிப் 40 ரன்களிலும் முஸ்தஃபீர் ரஹீம் நிதானமாக விளையாடி 66 ரன்களை அடித்தனர். அதன் பின் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்திலே வெளியேற மஹ்முதுல்லாஹ் 41 ரன்கள் குவித்தார். பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே குவித்தது.
246 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அரசின் ரச்சின் ரவீந்திர 9 ரன்கள் அவுட் ஆகி வெளியேற ரசிகர்களை ஏமாற்றினார்.நிதானமாக விளையாடி வந்த கான்வே 45 ரன்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் தன்னுடைய அரை சத்தத்தை பூர்த்தி செய்தார்.
பங்களாதேஷ் அணி அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறி வந்தனர். கேன் வில்லியம்சன் உடன் இணைத்த மிட்செல் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை நான்கு திசைகளிலும் சிதறடித்தனர். 78 ரன்கள் இருந்த நிலையில் காயம் காரணமாக வெளியிரினார். அதன் பின் தான் மிட்செல் தனது அதிரடியை காட்ட தொடங்கினார்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ
ஷகிப் இந்த போட்டி முடிந்த பின் ஸ்கேன் செய்ய போகிறார். நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. நாங்கள் நன்றாக போட்டியை தொடங்கவில்லை. முதல் 10-15 ஓவர்களில் கடைசி ஆட்டத்தில் கூட நாங்கள் மோசமாக பேட் செய்தோம். விக்கெட் நன்றாக இருக்கிறது. சிலர் புதிய பந்துடன் பவுன்ஸ் செய்கிறார்கள். நாம் கொஞ்சம் பொறுப்புடன் பேட்டிங் செய்ய வேண்டும். முதல் 10-15 ரன்களில் கொஞ்சம் கவனமாக பேட்டிங் செய்தால், சிறப்பாக ஆட முடியும். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் வேகப்பந்து வீச்சுத் துறைதான் மிகப்பெரிய முன்னேற்றம் என்று நினைக்கிறேன். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.