திரும்பி வந்ததெல்லாம் ஓகே… ஆனால் இதில் எனக்கு திருப்தி இல்லைங்க – பண்ட் குறித்து சேவாக் வெளிப்படை.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இதில்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்ற வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் விசாகப்பட்டினம் மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொள்கைதான் 272 ரன்களை விளாச டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது.
இருந்த போதிலும் இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
சொல்லப்போனால் கடந்த 2022 ஆண்டு டிசம்பரில் ஒரு உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களில் இருந்து மீண்டு கிரிக்கெட் நடவடிக்கைக்குத் திரும்பிய பந்தின் உறுதியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளார்க் பாராட்டினார். பண்ட் மூன்று தசைநார் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், ஊன்றுகோலில் நடந்து பல மாதங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்றார். இப்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் 33/4 என்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் தலா ஒரு அரை சதம் அடித்து 93 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருப்பினும் டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தோல்விக்குப் பிறகு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், டிசி கேப்டன் பண்ட்டை கடுமையாக விமர்சித்தார் மற்றும் இரண்டு முறை சாம்பியனுக்கு எதிரான அவரது பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில் “ரிஷிப் பண்டின் இன்னிங் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் முதல் இரண்டு ஆட்டங்களில் நீங்கள் அதிகம் ஸ்கோர் செய்யவில்லை, இப்போது ரன்களை எடுக்கும்போது அவரது விக்கெட்டைக் கொடுக்கிறார். ரிஷிப் பண்ட் சதத்தை எட்டியிருக்க வேண்டும், 110 அல்லது 120 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த போட்டியில் ரன் என்பது சுலபமாக வந்துகொண்டிருந்தது.
அவரது பேட்டிங் நன்றாக இருந்தது, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். ஆனால் இந்த போட்டியில் டெல்லி அணி தோற்கும் என்ற விஷயம் முதல் ஓவரிலேயே தெரிந்து விட்டது. இதனால் அங்கு பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டிய நேரம். அவர் 20 கூடுதல் டெலிவரிகளை விளையாடியிருக்கலாம். இதன் மூலம் அடுத்து வரும் போட்டிக்கு ஒட்டுமொத்தமாக பயிற்சியைத் தவிர்த்துவிட்டு அடுத்த போட்டிக்கு நேராக விளையாடியிருக்கலாம் என்றார் என்று சேவாக்.