சச்சினை 2011 உலக கோப்பையில் தோனியோ அல்லது நானோ தோளில் தூக்காமல் கோலி தூக்க காரணம் இதுதான் – விளக்கமளித்த சேவாக்.

கடந்த 2019ஆம் ஆண்டின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2023 உலக கோப்பையயை விளையாட இருக்கிறது. இந்த முறை ரோஹித் சர்மா கேப்டனாகவும், அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதினாலும், அதோடு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த

By ·

கடந்த 2019ஆம் ஆண்டின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2023 உலக கோப்பையயை விளையாட இருக்கிறது. இந்த முறை ரோஹித் சர்மா கேப்டனாகவும், அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதினாலும், அதோடு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற்று மீண்டும் 3 வது முறையாக உலா கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலம் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2011ஆம் இந்திய அணி 2வது முறையாக கோப்பையை தோனியுடைய கடைசி சிக்ஸரில் வென்றது. ஆனால் அந்த தொடரில் தோனியை விடவும் மற்ற வீரர்கள் குறிப்பாக கம்பீர், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் சச்சினின் கடைசி உலகக்கோப்பையும் அதுதான். அப்படியிருக்க அந்த வென்றி சச்சினுக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது.

மேலும் அந்த போட்டியில் வெற்றிபெற்றவுடன் கோலி சச்சினை தூக்கி வான்கடே மைத்தனத்தில் வலம் வந்தார், அதற்கு கோலி கூறிய காரணம் 21 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டை தோளில் சுமந்த சச்சினை இன்று நாம் தோளில் சுமக்க வேண்டிய நேரம் என்றார். அந்த விஷயத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே சமயம் கோலி சச்சினுக்கு பிறகு இந்தியாவின் முக்கிய வீரராக விளையாடி பல சாதனைகளை படித்து வருகிறார். சொல்லப்போனால் சச்சினின் சில சாதனைகளையும் கோலி முறியடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த உலக கோப்பையில் கோலி முழு வேகத்துடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அவர் தயாராகியும் வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான வெளியிட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இது கலந்து கொண்டு பேசிய சேவாக் விராட் கோலி குறித்தும், சச்சின் டெண்டுல்கர் குறித்தும் பேசியிருந்தார்.

விராட் சச்சினை தூக்க கரணம் :

அவர் கூறுகையில் “விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை அந்த போட்டி முடிந்ததும் மைத்தனத்தில் தோள்களின் மீது தூக்கி வர காரணம் என்னவென்றால், நாங்கள் சச்சினை தூக்க வில்லை என்று சொல்லிவிட்டோம். ஏனென்றால் சச்சின் அதிக கனமாக இருந்தார். எனவே எங்களினால் தூக்க முடியவில்லை. அதோடு எங்களுக்கு தோளில் காயமும் இருந்தது, எம்.எஸ். தோனிக்கு களில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மற்றவர்களுக்கு சில வகையான காரணங்கள் இருந்தது.

எனவே சச்சினை தூக்கி சொல்லும் பொறுப்பை நாங்கள் இளம் வீரர்களின் கைகளில் கொடுத்தோம். அவர்களிடம் நீங்கள் சென்று சச்சின் டெண்டுல்கரை தூக்கி மைதானம் முழுவதும் வலம் வாருங்கள் என்று கூறினோம். அதனால் தான் அப்போது விராட் கோலி சச்சினை தூக்கி மைதானத்தில் வலம் வந்தார் என்று சிரித்த முகத்துடன் கூறினார் வீரேந்திர சேவாக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை