என்ன பஜ்ஜி கிடைக்குமா? மழைக்கு பிறகு ஆசிய கோப்பை கவுன்சிலை கலாய்த்த சேவாக்.
ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொ
ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. இதனால் கோபமடைந்த பல கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆசிய கோப்பை தொடரை ஏன் இலங்கயில் மழை வரும் காலங்களில் வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் சேர்மன் சேர்மன் கூட இது குறித்து பேசுகையில் “எவ்வளவு ஏமாற்றம்! கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியாக மழை பெய்து வருகிறது. ஆனால் இது கணிக்கப்பட்டது. பிசிபி தலைவராக, நான் ஏசிசியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடும்படி வலியுறுத்தினேன், ஆனால் இலங்கைக்கு இடமளிக்க மோசமான சாக்கு போக்குகள் கூறப்பட்டன என்று பதியிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “துபாயில் மிகவும் சூடாக இருக்கிறது என்று அவர்கள் சொன்னதாகவும். ஆனால் கடந்த முறை செப் 2022 இல் ஆசியக் கோப்பை விளையாடியபோது அல்லது ஏப்ரல் 2014 மற்றும் செப் 2020 இல் ஐபிஎல் அங்கு விளையாடினார்கள். இது விளையாட்டிற்குள் அரசியலை கொண்டு வருகின்றனர் இது மன்னிக்க முடியாதது என்று கூறியிருந்தார்.
Baarish ke time toh Chai Pakode rakhte hain yaar.
— Virender Sehwag (@virendersehwag) September 2, 2023
Asia cup bhi rakh diya. #BHAvsPAK
இப்படிப்பட்ட நிலையில் தான் “மழை காலத்தில் பஜ்ஜி மட்டுமல்ல ஆசிய கோப்பை தொடரும் கிடைக்கும்” என்று கலாய்த்தவாறு ஒரு பதிவை வீரேந்திர சேவாக் இட்டிருந்தார். இதிலிருந்தே தெரிவிக்கிறது அவருக்கு இந்த போட்டி மழையை தடைபட்டது. மேலும் ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடும் அடுத்த போட்டியிலும் மழை பெய்தால் கண்டிப்பாக அது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது.