அவருக்கு சின்ன பசங்க மாறி பௌலிங் செய்ரீங்க – பாக் பௌலர்களை விமர்சித்த சேவாக்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோயது. மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோயது. மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்கான முயற்சியில் களமிறங்கியது.
அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். 30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சு குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் தான் சேவாக் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “ரோஹித்துக்கு ஷார்ட் பந்து வீசுவதற்கான பாகிஸ்தானின் தந்திரம் எனக்கு புரியவில்லை. ரோஹித் சர்மா சில முறை புல் ஷாட் விளையாடி அவுட் ஆனார், ஆனால் அது அவரை பெரிதாக தொந்தரவு செய்யவில்லை. அவர் இந்த விக்கெட்டிலும் இந்த மைதானத்திலும் ஒருபோதும் சிரமப்படப் போவதில்லை. அவர் அப்படிப்பட்ட வடிவத்தில் இருக்கும்போது, அவர் ஒரு புல் ஷாட்டை தவறாக டைம் செய்வது மிகவும் அரிதான ஒரு விஷயம்.
உங்களிடம் வெறும் 191 ரன்கள் மட்டுமே போர்டில் இருக்கும்போது, முதல் 5-7 ஓவர்களில் நீங்கள் அடிக்கவில்லை என்றால், அது எப்போதும் கடினமாக இருக்கும். மேலும் முதல் இரண்டு ஓவர்களில் இந்திய பேட்டர்கள் தொடங்கிய விதம் பாகிஸ்தான் அணிக்கு அதனை இன்னும் கடுமையாக்கியது. ரோஹித் சதம் அடிக்காமல் ஏமாற்றம் அடைவார், ஆனால் அவர் செட் ஆனவுடன் அவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் ஓன்று பாசிட்டிவ் பேட்டிங் தான்.
அந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்பைப் பற்றி யோசிக்கக் கூட அவர் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. நிச்சயமாக பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை. பந்து சற்று மெதுவாக இருந்தது, ஆனால் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியை அதிலிருந்து மீண்டு வர விடவில்லை. இது ஒரு சாதாரண பந்துவீச்சைப் போலவே இருந்தது, கிட்டத்தட்ட குழந்தைகள் ரோஹித் சர்மாவிடம் பந்து வீசுவது போல் இருந்தது. .அவர் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார் என்று கூறினார் சேவாக்.