இதை பற்றி பேசுவதற்கு ரோஹித் ஷர்மாவுக்கு தனி தைரியம் வேண்டும். ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த சேவாக்.

ரோஹித் ஷர்மாவை பாராட்டி பேசிய சேவாக். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஐந்தாவது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மோதினர். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித

By ·

ரோஹித் ஷர்மாவை பாராட்டி பேசிய சேவாக். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஐந்தாவது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மோதினர். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்றைய போட்டி

இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி அடுத்தடுத்து வெக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 273 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் கிஷன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீசை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். ரோகித் சர்மா 63 பந்துகளில் தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். மேலும் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை குவித்தனர்.

மற்றொரு பக்கம் விளையாடி கொண்டு இருந்த இஷாந்த் கிஷன் 46 பந்துகளில் 47 ரன்களை அடித்த நிலையில் ரஷித் கான் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைத்து பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். அதன் பின் அவர் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் விராட் கோலி 55 ரன்களும் ஸ்ரேஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் ரோஹித் ஷர்மா வெற்றியை பற்றி பகிர்ந்துள்ளார்.

ஷேவாக் கூறியது.

சேவக் கூறுகையில் ரோகித் சர்மா ஒவ்வொரு சாதனைகளையும் முறியடித்துக் கொண்டே வருகிறார். அவர் மூன்று இரட்டை சதங்களை அடித்த போதும் தன்னுடைய பேட்டிங் ரசித்ததாகவே அவர் கூறியிருந்தார். தான் முன்னின்று அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை அடித்து துவக்கம் தருவது தான் பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை கேப்டனாக இருந்து பொது இடத்தில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்.

மேலும் 19 இன்னிங்ஸ்கள் விளையாடி உலக கோப்பையில் ஆயிரம் ரன்களையும் இவர் கடந்து இருக்கின்றார். ரோகித் சர்மாவில் ஸ்பெஷாலிட்டி என்ன என்பது அவருடைய டைம் இருந்தால் அவர் குறித்து நாம் யோசிக்கும் போதெல்லாம் நமக்கு முதலில் தோன்றுவது அவருடைய டைமிங் தான். அவர் எப்போதும் ஒரு முன் நின்று அதிரடியாக கிரிக்கெட்டை விளையாட விருப்பம் உள்ளவராகவே இருக்கிறார். மேலும் அதை தானே செய்ய வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார் இதுதான் முக்கியமானது என்றும் ஷேவாக் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை