IND vs PAK (2007) போட்டியில் தோனியிடம் சேவாக் கேட்டுக்கொண்டது இதுதான் – மீதி வரலாறாக மாறியது சம்பவம்.

இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடுவதில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய கிரி

By ·

இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடுவதில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் உட்பட பல சாதனைகளை சேவாக் படைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கடந்த 2007 ஐசிசி உலக கோப்பை டி20 போட்டியின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க பந்துவீச்சை நினைவு கூர்ந்தார். 2007ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி ட பிரிவில் போய்ட்டியிட்டது. இந்நிலையில் அந்த போட்டியின் போது கடைசி வரையில் போராடிய நிலையில் போட்டி சமனாக மாறியது.

இந்நிலையில் தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பவுல்-அவுட் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இரு அணிகளின் பந்து வீச்சாளர்களுக்கும் ஸ்டம்புகளை ஒரு முறை அடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா போன்றோருடன், பவுல்-அவுட்டின் போது ஸ்டம்பைத் அடித்தார்கள்.. மறுபுறம் பாகிஸ்தான் ஸ்டாம்புகளை அடிக்க தவறியதால் தோல்வியடைந்தது. இறுதியில் இந்தியா போட்டியைக் கைப்பற்றியது.

இந்த பவுல்-அவுட் முறையில் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் போட்டியில் வெற்றி பெற முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய சேவாக் கூறுகையில் ” நான் முதல் பந்து வீச செல்கிறேன், நான் கண்டிப்பாக ஸ்டெம்புகளை அடித்து விடுவேன் என்று நம்பிக்கை கூறினேன். மேலும் பந்துவீச்சாளர்களிடம் பந்தை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

இதனால் தோனி என்னிடம் என்ன கொடுக்க வேண்டாம் என்று கேட்டார். நான் அதற்கு அவர்கள் நீண்ட தூரம் ஓடிவருவத்தினால் சொதப்பி விடுவார்கள் என்று கூறினேன் என சேவாக் அந்த பேட்டியில் கூறினார். மேலும் பேசிய அவர் “நாங்கள் அனைவரும் வாரம்-அப்பில் பவுல்-அவுட்முறையை பயிற்சி செய்தோம் இதனால் எங்களால் சுலபமாக பந்துவீச முடிந்தது என்று கூறினார் சேவாக்.

குறிப்பிடதக்க வகையில் அந்த போட்டியில் பவுல்-அவுட் முறையின் போது சேவாக் ஸ்டெம்புகளை முதல் ஆளாக அடித்தார். அதற்கு பிறகு ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா என் சூழல் பந்து வீச்சாளர்களின் மூலம் வென்றது இந்திய அணி

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை