தோனி இல்லை என்றால் விராட் கோலியின் கேரியர் முடிந்திருக்கும் – சேவாக் அதிர்ச்சி தகவல்

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில

By ·

உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியை முறியடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதற்கு விராட் கோலியும் தன்னால் முடியும் என்று கடந்த பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் 47 வது சதம் அடித்தார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னமும் 2 சாதங்களே மீதம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் விராட் கோலி குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் ரோகித் சர்மாவை தான் விராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற செய்ய நினைத்தனர். ஆனால் அப்போது தோனி தான் விராட் கோலி தான் அணியில் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அந்த சமயத்தில் நான் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தேன். அப்பொழுது தோனி எடுத்த முடிவினால் தான் இன்று விராட் கோலியின் டெஸ்ட் கேரியர் இவ்வளவு வெற்றிகரமாக உள்ளது.

தோனி இல்லை என்றால் விராட் கோலியின் டெஸ்ட் கேரியர் எப்போதோ முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது பலருக்கு தோனியின் மீது உள்ள மரியாதையை இன்னமும் அதிகரிக்க வைத்துள்ளது, மேலும் இவர் கூறுவது போல கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி தான் முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 21 ரன்கள் சராசரியுடனே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதிலும் குறிப்பாக 2011-12 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முதல் இரண்டு போட்டிகளில் அவர் மொத்தமாக 50 ரன்கள் கூட தொடரவில்லை இதன் காரணமாக விராட் கோலியை அணியிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை இடம்பெற வைக்க நினைக்கும் போது தோனி தான் விராட் கோலியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்க. பின்னர் விராட் கோலி பல சாதனைகளை படைத்து வருவது வரலாறு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை