என்னுடைய காலரை பிடித்து தள்ளி விட்டார் – முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் மீது சேவாக் குற்றச்சாட்டு.
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பயப்படாமல் மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற சேவாக். ஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடு
இந்திய கிரிக்கெட்டில் மகத்தான பங்காற்றியவர் கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக். பயப்படாமல் மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற சேவாக். ஆக்ரோஷமான பேட்டிங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் துணிச்சலான ஷாட்களை விளையாடுவதில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் உட்பட பல சாதனைகளை சேவாக் படைத்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட்டில் 300 ரன்களை அடித்த முதல் வீரர் சேவாக் தான். தற்போது சேவாக் வயது முதிர்ச்சி காரணமாக வெளியேறினாலும் களத்திற்கு வெளியே, அவரது ஆளுமை மற்றும் நகைச்சுவையான நகைச்சுவை உணர்வு அவரை ரசிகர்கள் மற்றும் மற்ற வீரர்களை கவர்ந்திழுக்கிறது. ஓய்வு பெற்ற பிறகும், சேவாக் வர்ணனையாளர் மற்றும் வழிகாட்டியாக கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
ஆனால் இவர் இந்திய அணியில் இணைந்த போது இந்திய அணியில் பல பிரச்சனைகள் இருந்தது. குறிப்பிடதக்க வகையில் அப்போது சூதாட்டம் குறித்து இந்திய அணியானது பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தவர் தான் ஜான் ரைட். இவர் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து 2005 வரை சிறப்பான பயிச்சியாளராக இருந்தார்.
குறிப்பிடத்தக்க வகையில் இவருடைய காலகட்டத்தில் தான் இந்திய அணியானது பலவிதமான தடைகளை கடந்து 2003 ஆம் ஆண்டு இந்திய அணியானது உலக கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது. ஆனால் வெல்ல முடியவில்லை இருந்த போதிலும், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியதில் இவருக்கு கங்குலிக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்நிலையில் தான் ஜான் ரைட் குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரான சேவாக் ஒரு குற்றம் சாட்டியுள்ளார்.
சேவாக் கூறியதாவது “கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் என்னுடைய காலரை பிடித்த தள்ளிவிட்டார். நான் அப்போது மோசமாக விளையாடியதற்காக என்னுடைய காலரை பிடித்து தள்ளி விட்டார். அப்போது நான் மிகவும் கோபமடைந்தது அப்போது இந்திய அணியின் மேனேஜராக இருந்த ராஜிவ் சுக்லாவிடம் புகார் செய்தேன்.
என்னை எப்படி ஒரு பயிற்சியாளர் தாக்கலாம் என்று புகார் செய்தேன். பின்னர் அம்ரித் மாதுர் மற்றும் ராஜிவ் சுக்லா இருவரும் இணைந்து என்னை ஜான் ரைடுடன் சமாதானம் செய்து வைத்தார்கள் என்று ஒரு நிகழ்ச்சியின் போது கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல் ஏற்கனவே ஒரு முறை பேசப்பட்ட போது சச்சின் சேவாக்கிற்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.