தோனி போன்று உங்களினாலும் தொடர்ந்து விளையாட முடியும், உதவி வேண்டுமென்றால் போன் செய்யுங்கள் – மூத்த வீரருக்கு சேவாக் அறிவுரை.
ஐபிஎல் 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்றி வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் டைட்டாஸ் அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. மேலும் இந்த அணிகளில் உள்ள மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து வருக
ஐபிஎல் 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடைபெற்றி வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் டைட்டாஸ் அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. மேலும் இந்த அணிகளில் உள்ள மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். ஆனால் அப்படி மூத்த வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் பிட்னஸ் என்பது மிகவும் முக்கியம்.
அந்த வகையில் தோனி, ரஹானே, பியூஸ் சாவ்லா, மோஹித் சஹ்ரமா, ஷிகர் தவான் போன்ற மூத்த வீரர்கள் இன்னமும் ஐபிஎல் போட்டிங்களில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் பல ஐபிஎல் போட்டிங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர் அமித் மிஸ்ரா. இவருக்கு 40 வயது ஆனாலும் இந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 7.15 ஏற்ற சராசரியுடன் இருக்கிறார்.
மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் மிஸ்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிரியார். ஆனால் இவருக்கு வயதான காரணத்தினால் அடுத்த வருடம் விளையாடுவார் என்று தெரியத நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான வீரேந்திர சேவாக் மிஸ்ராவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
Caught & bowled, with ease 😎#TATAIPL | #SRHvLSG
— IndianPremierLeague (@IPL) May 13, 2023
Relive how @MishiAmit dismissed the well-set Anmolpreet Singh 🎥🔽 pic.twitter.com/sBkz7VI9XM
சேவாக் கூறியது :
அவர் கூறுகையில் “மிஸ்ராவுக்கு வயது ஆனாலும் அவருடைய திறமை எங்கேயும் போகாது. அனால் வயதனால் கேவாம் குறையும் அது போன்ற சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதால் ஓய்வு பெறுவார்கள். நீங்கள் இப்போது வேண்டுமானாலும் சுனில் கவாஸ்கரிடம் பேட்டை கொடுத்தால் அவர் சிறப்பான ஷாட்டுகளை அடிப்பார். ஆனால் ரன்கள் எடுக்க ஓடுவது ஃபீல்டிங் செய்வதும் முன்பு போல் இருக்காது என்றார் சேவாக்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “நான் எப்போதும் சொல்வது கிரிக்கெட் வீரர்கள் வெகு விரைவகை ஓய்வு எடுக்க வேண்டாம் என்பதே. அந்த வகையில் மிஸ்ராவிடம் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அந்த நேரத்தில் அவர் தன்னை மாற்றிக்கொண்டு தனது கேரியரை நீட்டிக்கலாம். அதை ஏற்கனவே தோனி, ரோஹித், விராட் மற்றும் தவான் போன்றவர்கள் செய்து வருகின்றனர். அவர்களைப் போலவே உங்களாலும் இன்னும் 1 அல்லது 2 வருடம் கேரியரை நீட்டிக்க முடியும்.
ஆனால் அதற்கு நல்ல ஃபிட்னஸ் அவசியமாகும். எனவே மிஸ்ரா ஜி இதை நீங்கள் கேட்டால் அடுத்த வருடம் தொடர்ந்து விளையாடுங்கள். அதற்காக சற்று கடினமாக உழையுங்கள். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்ய கொடுக்கிறேன் என்றார் சேவாக்.