சிஎஸ்கே தோத்தாலும் ஜெயிச்சாலும் யாருக்கு கவலை? தோனி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.. அவ்வளவுதான்- சேவாக் ஓபன் டாக்.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை முடிவு செய்தார். இந்நிலையில் இது அவர்களுக்கு பாதகாமாக சென்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய குஜராத் அணி 231 ரன்கள் எடுக்க சென்னை அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. என்னதான் எம்.எஸ் தோனி கடைசி நேரத்தில் வந்து சில சிக்ஸர்களை பறக்க விட்டாலும் அது சென்னை அணி வெற்றியடைய போதுமானதாக இல்லை. இதனிடையே தோனி முணராகவே களமிறங்க வேண்டும் என்கிற விமர்சனமும் எழுகிறது.

இருந்த போதிலும் தோனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தாமதமாக களமிறங்குவதாக ஏற்கனவே சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் கூறியிருந்தார். அவர் தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்குகினார் என்பதினால் போட்டியில் செல்வாக்கை குறைத்து மதிப்பிடாதீர்கள் ஏற்றம். அதற்கான ஒரு நேர அம்சம் உள்ளது, ஆனால் அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

மேலும் அவரிடம் இருந்து அவர் என்ன செய்யமுடியுமோ அதை முழுவதுமாக பெறுவோம். ஆனால் அவரை மற்ற போட்டிகளில் இழக்கும் அளவிற்கு அவருக்கு பணிச்சுமை கொடுக்க மாட்டோம். எனவே இது ஒரு நுட்பமான சமநிலை என்றும் விளக்கி கூறியிருந்தார். இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் வீரேந்திர சேவாக் தோனி தாமதமாக களமிறங்குவது குறித்து பேசியுளார்.

அவர் கூறுகையில் : தோனியின் பேட்டிங் நிலையைப் பற்றிய விவாதத்தை நாம் நிவ்ரும் முடிக்க வேண்டும். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருக்குத் தெரியும். அது தோனியின் விருப்பம். ஆனால் நீங்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர் இருக்கும் ஃபார்ம் மற்றும் அவர் பேட்டிங் செய்யும் ஸ்ட்ரைக் ரேட்டில் மற்ற பேட்டர்களும் அதே அளவில் விளையாட வேண்டும்.

நான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. அவர் எங்கு பேட் செய்தாலும் பரவாயில்லை. அவர் நன்றாக விளையாடினார். மேலும் தோனி பொதுமக்களை மகிழ்வித்தார். அவர்கள் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் யார் கவலைப்படுகிறார்கள்? அவர் பொதுமக்களை மகிழ்வித்தார் அவ்வளவுதான் என்றார் வீரேந்திர சேவாக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை