நான் மட்டும் 2011 உலக கோப்பையில் கேப்டனாக இருந்தால் இதுதான் நடந்திருக்கும் – ரோஹித் சர்மா குறித்து சேவாக்.

ரோஹித் சர்மா தற்போது ஒரு கேப்டனாக இந்திய அணியை உலக கோப்பை போட்டியில் வழிநடத்தி சென்ற போதிலும், கடந்த 2011 இந்தியா உலக கோப்பையை வென்ற போது அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி இளம் வீரரான ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு என்பது கொடுக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியான ஒரு விஷயமாக இர

By ·

ரோஹித் சர்மா தற்போது ஒரு கேப்டனாக இந்திய அணியை உலக கோப்பை போட்டியில் வழிநடத்தி சென்ற போதிலும், கடந்த 2011 இந்தியா உலக கோப்பையை வென்ற போது அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி இளம் வீரரான ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு என்பது கொடுக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியான ஒரு விஷயமாக இருந்தது. மேலும் ரோஹித் ஷர்மாவே நேரடியாக தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு பிறகு தன்னை மெருகேற்றி கொண்ட ரோஹித் சர்மா 2013ல் நடந்த சாம்பியன் ட்ராபி போட்டியில் இந்தியாவிற்கு கோப்பையை பெற்று கொடுத்தார், அதன் பின்னர் இந்திய அணியின் பிரதான தொடக்க வீரராக உருவெடுத்தார் ரோஹித் சர்மா. மேலும் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியை 2023 உலக கோப்பையில் வழிநடத்துகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் ரோஹித் சர்மா 2011 ல் விளையாடதது குறித்து பேசியுள்ளார் சேவாக். அவர் கூறுகையில் ” நான் கேப்டனாக இருந்திருந்தால் அல்லது தேர்வாளராக இருந்திருந்தால், 2011 உலகக் கோப்பைக்கு அவரை நிச்சயம் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆனால் அந்த நேரத்தில் அவர் இப்போது இருக்கும் ரோஹித் சர்மா இல்லை. அவர் சற்று இளமையாக இருந்தார். முடிவில் அணி சமநிலையை முடிவு செய்வது கேப்டன் மற்றும் தேர்வாளர்களின் முடிவாகும்.

ஒரு வேளை அந்த ஒரு தருணம் அவரை இன்னும் நிலையானதாக ஆக்கத் தூண்டியிருக்கலாம். மேலும் வரும் உலக கோப்பைகளை இழக்காத வண்ணம் அதிக ரன்களை அடிக்க வைத்திருக்கலாம். ஒரு உலகக் கோப்பைக்கு நீங்கள் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும், அந்த நேரத்தில், யூசுப் பதான் போட்டிக்கு சற்று முன்பு இரண்டு முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினர், அது அவருக்குச் சாதகமாகச் செயல்பட்டது மற்றும் ரோஹித் சர்மாவை விட்டு அணி வெளியேற வேண்டியிருந்தது என்றார் சேவாக்.

மேலும் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கலக்கிய ரோஹித் சர்மா குறித்து பேசிய சேவாக் கூறுகையில் “ரோஹித் ஷர்மா தனது இன்னிங்ஸ் மூலம் பெரிய சதங்களை அடித்ததன் மூலம் தெளிவான செய்தியை கொடுத்தார், இன்றும் அவர் தனது சதத்தை எட்டிய பிறகு மேலும் 30 ரன்கள் எடுத்தார், ஏற்கனவே மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளார். எனவே அவர் கிரீஸில் நின்றால் அவர் உங்களை விடமாட்டார், அவர் இன்றும் இரட்டை சதத்தை கணித ரீதியாக தவறவிட்டார் என்றார் சேவாக்.

இந்நிலையில் “வீரேந்திர சேவாக் வெளியேறிய பிறகு ரோஹித் தொடக்க ஆட்டக்காரரானார். அவர்களுக்கு மாற்றாக யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் MS டோனி ரோஹித்திடம் ஒரு நல்ல நுட்பம் இருந்ததால் அவரை தொடக்க வீரராக களமிறங்கினார், தொடக்கத்தில் ரோஹித் தயங்கினாலும் பின்னர் பிடிப்பை ஏற்படுத்தி கொண்டு தற்போது அவர் 10,000 ரன்களுக்கும் அதிகமான ரன்களையும் 30 க்கும் மேற்பட்ட ODI சதங்களையும் பெற்று இந்திய அணிக்கு தூணாக இருக்கிறார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை