தோத்துட்டு நொண்டி சாக்கு சொல்றிங்களே? பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்த சேவாக்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இவ்விரண்டு அணிகள
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இவ்விரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.
பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதே போல் ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது. இந்த இரண்டு அணிகளும் செமி பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் சிக்கி இன்று போட்டியை விளையாடியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது. 283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது அணிக்கு அதிக பட்சமாகஇப்ராஹிம் சத்ரான் 87ரன்களும், ரஹ்மத் ஷா 77 ரன்களும், குர்பாஸ் 65 ரன்களும் குவித்தனர்.பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமைந்தாலும் பௌலிங் மற்றும் பீல்டிங் சுமாராகத்தான் இருந்தது. அப்ரிடி மற்றும் ஹாசன் அலி தலா ஒரு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தன.
இதனால் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் இந்தியாவிடம் தோல்வியடைந்த போது பாகிஸ்தான் நிர்வாகம் பலவிதமான குற்றசாட்டுகளை ஐசிசி மீதும் பிசிசிஐ மீதும் வைத்து. இந்த நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வியை தழுவிய நிலையில் தான் முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக் இதற்கு டிவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
Pakistan is an unpredictable side but the way they have been making lame excuses for their earlier defeats, this was certainly on the cards. Just did not focus on their many weaknesses. What a proud day for Afghanisitan, came close many times but today crossed the line. #AFGvsPAK pic.twitter.com/axdkdSZVFo
— Virender Sehwag (@virendersehwag) October 23, 2023
அவர் போட்டிருந்த பதிவில்”பாக்கிஸ்தான் ஒரு கணிக்க முடியாத பக்கமாக இருந்து வருகின்றனர், ஆனால் அவர்களின் முந்தைய தோல்விகளுக்கு அவர்கள் நொண்டி சாக்குகளை குறி வந்தனர். அதே நேரத்தில் அவர்கள் தங்களுடைய பல பலவீனங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு என்ன ஒரு பெருமையான நாள், பலமுறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியை நெருங்கி வந்தாலும் இன்று அதனை மீறிவிட்டனர் என்று கூறியுள்ளார் சேவாக்.