பில்டிங் ஸ்லோவாக இருக்க காரணம் இது தான் – வித்தியாசமான காரணத்தை கூறிய பாக் வீரர் சதாப் கான்.
அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த உலக தொடரில் கலந்து கொள்வதற்காக மற்ற நாடுகளை சேர்ந்த அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டன. மேலும் உலக
அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது நாளை 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த உலக தொடரில் கலந்து கொள்வதற்காக மற்ற நாடுகளை சேர்ந்த அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டன. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக சில பயிற்சி ஆட்டங்களிலும் உலக கோப்பையில் பம்ஜிக்குப்பெறும் அணிகள் விளையாடின.
அந்த வகையில் பாஸ்கிதான் அணியானது துபாய் வழியாக ஹைதாராபாத்திற்கு வந்தடைந்தது. மேலும் பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. ஆனால் இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. குறிப்பாக நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணியின் பீல்டிங் என்பது மிகவும் மோசமாக இருந்தது.
கிட்டத்தட்ட பல காலமாக இருக்கும் பீல்டிங் பிரச்னை தொடர்கிறது என் பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அப்படிப்பட்ட நிலையில் பொதுவாகவே ஹைதராபாத் என்றால் பிரியாணி என்பது மிகவும் பிரபலமான ஓன்று என்பதினால் பாலரும் அதனை சுவைக்க ஆசைப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் வீரர் சதாப் கான் “தினமும் ஜைதாராபாத் பிரியாணியை சாப்பிடுவதினால் தான் பீல்டிங் ஸ்லோவாக இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் “போட்டிகளில் முடிவு என்பது முக்கியமில்லை. எங்களுக்கு இந்த போட்டிகளிலும் மூலம் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கின்றனர். எங்கள் அணுகுமுறை நன்றாக இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் முடிவு நம் கையில் இல்லை என்றார் சதாப் கான்.
Shadab Khan says the side is eating Hyderabadi Biryani daily 👀
— Geo Super (@geosupertv) October 3, 2023
Read more: https://t.co/qC7Oz7r1rw#CWC23 pic.twitter.com/DVneEGy5vd
மேலும் பேசி அவர் கூறுகையில் இந்த தொடருக்காக எங்கள் அணியில் 11 பேர் வரிசைப்படுத்தப்பட்டதாக நான் நினைக்கிறேன், பெஞ்ச் அவர்களின் திறமையைக் காட்ட நாங்கள் நேரம் கொடுக்க விரும்புகிறோம். நீங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும்போது. நீங்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். ஹைதராபாத்தில் நிலைமைகளைப் பற்றியும் தன்மை பற்றியும் சிறிது அனுபவம் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார் சதாப் கான்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது 2023 உலக கோப்பையின் முதல் போட்டியை வரும் 6 ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோத இருக்கிறது. இந்த போட்டியை தொடர்ந்து 10 ஆம் தேதி இலங்கை அணியுடனும், 14ஆம் தேதி இந்திய அணியிடவுன் அகமதாபாத் மைதானத்திலும் விளையாட இருப்பது குறிப்பிடதக்கது.