ரின்கு சிங் திருமணத்தில் ஷாருக்கான் செய்து கொடுத்துள்ள சத்தியம்.
ஐபிஎல் 2023தொடரில் பல அற்புதமான நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற நினைத்து பார்க்காத ஓன்று. அந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக அப்போது வந்தது. கிட்டத்தட்ட வெற்றியடையவே முடியாது என்ற நிலையில் இருந்து ஒரே ஓவரில் 5 சிக்ஸ
ஐபிஎல் 2023தொடரில் பல அற்புதமான நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற நினைத்து பார்க்காத ஓன்று. அந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக அப்போது வந்தது. கிட்டத்தட்ட வெற்றியடையவே முடியாது என்ற நிலையில் இருந்து ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு யாருமே நம்ம்பமுடியாத இதுவரையில் ஐபிஎல் போட்டியில் நடக்காத ஒரு விஷியத்தை நடத்தி காட்டியவர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரிங்கு சிங்.
இவர் ஒரு சாதரண கேஸ் சிலிண்டர் போடும் தந்தையின் மகனாகவும், கிட்டத்தட்ட துப்புரவு பணிக்கு செல்ல இருந்த ரிங்கு பெற்றோர்களின் அன்பினாலும் தன்னுடைய கடின உழைப்பினாலும் படிப்படியாக முன்னேறி ஐபிஎல் 2023 போட்டியில் தற்போதைய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை தனி ஆளாக வீழ்த்தி அப்படி ஒரு அற்புதத்தை செய்தது இன்னமும் பல காலங்களுக்கு பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்நிலையில் தான் ரிங்கு சிங்கின் அந்த அற்புதமான சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு ஏதாவது சிறப்பு பரிசாக வழங்க SRK முடிவு செய்துள்ளார். அது மற்றவர்கள் போன்று வழக்கமான பரிசு கிடையாது. ஆனால் அது ஒரு திருமண பரிசு. கண்டிப்பாக பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அந்த பரிசை எந்த மணப்பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். அது என்ன பரிசு என்று சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் சிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
அதாவது ட்விட்டரில் ஷாருக்கான் வாரியர்ஸ் ரசிகர் மன்றத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் கிரிக்கெட் தொகுப்பாளர்கள் ரிங்கு சிங்கிடம் அன்றய போட்டி குறித்து பேசியிருந்தார்கள். அப்போது ஷாருக்கான் தனக்கு கொடுக்கும் அந்த பரிசை பற்றி பேசியிருந்தார். ரிங்கு கூறுகையில் “அந்த போட்டிக்கு பிறகு ஷாருக்கான் அவர்களுடன் நான் போனில் பேசினேன். அப்போது சில விசியங்களை விவாதித்து என்னுடைய திருமணம் குறித்து பேசினார்.
When SRK Called Rinku Singh pic.twitter.com/Nn9WMx0KgX
— SrkWarriorsVideo (@WarriorsVideo) April 27, 2023
அப்போது ஷாருக்கான் சொன்னார் “என்னை பலர் அவர்களுடைய திருமணத்திற்கு அழைத்திருக்கின்றனர் இருந்தாலும் நான் போகவில்லை. ஆனால் நான் உங்களுடைய திருமணத்திற்கு வந்து நடனமாடுவேன் என்று கூறியதாக ரிங்கு சிங் தெரிவித்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் kkr vs gt போட்டியின் போது ஷாருக்கான் ரிங்கு சிங்கை பாராட்டியதும், பதான் படத்தின் போஸ்டரில் ரிங்கு இருப்பதை போல எடிட் செய்து அவருடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்ததும் குறிப்பிடதக்கது.